27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201610151322540864 How to identify the impact of women for Infertility SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்களின் குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது எப்படி

பெண்களின் குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.

பெண்களின் குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது எப்படி
குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது பற்றி முதலில் பார்ப்போம்.

திருமணமான தம்பதிகள் எந்த வித கருத்தடை முறைகளையும் பின்பற்றாமல் உறவு கொண்டு ஒரு வருடம் ஆகியும் பெண் தாய்மையடையவில்லை என்றால் அந்தப் பெண், குழந்தைப்பேறுக்கான சிகிச்சைக்குரியவர் ஆகிறார். அவர் தாய்மையடைவதற்கு என்ன தடைகள் இருக்கின்றன என்பது முதலில் சோதனை மூலம் கண்டறியப்படவேண்டும். சினைப்பையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா, அதில் இருந்து முட்டை முதிர்ந்து வெடித்து இயல்பாக வெளிவருகிறதா, கருப்பையின் அளவு- வளர்ச்சி போன்றவை முழுமையாக இருக்கிறதா, கட்டிகள் இருக்கிறதா என்பதை எல்லாம் `அல்ட்ரா சவுண்ட்’ மூலம் கண்டறியலாம்.

சினைப்பை, கருப்பையில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்தால் சினைமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கருவாகி, நகர்ந்துபோகும் கருக்குழாய்களில் (பேலோபியன் டியூப்) ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியவேண்டும். `ஹிஸ்ட்ரோ சால்பிங்கோ கிராம்’ எனப்படும் சோதனையை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் நவீனமுறையில் செலுத்தி, பரிசோதித்து கருக்குழாய் அடைப்புகளை துல்லியமாக கண்டறிந்து விடலாம்.

`அல்ட்ரா சவுண்ட்` மூலம் சினைப்பை, கருப்பை சோதனை செய்யும்போது கட்டிகளோ, புற்றுநோய் பாதிப்போ இருப்பதாக கண்டறிந்தால், அந்த பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது, அந்த கட்டி எந்த வகையை சார்ந்தது என்பதை எல்லாம் துல்லியமாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் கண்டறிந்துவிடலாம். அதை அடிப்படையாக வைத்து சிகிச்சைக்கு திட்டமிட்டுவிட முடியும்.

பெண் கர்ப்பம் ஆவது சிறுநீர் மூலம் உறுதி செய்யப்படுகிறது. பின்பு ஐந்தாவது வாரத்தில் கரு, கருக்குழாயிலே தங்கிவிட்டதா அல்லது கருவாக்கம் நிகழ்ந்து, கருப்பையை அடைந்துவிட்டதா என்பதை கண்டறிவது மிக அவசியமாகும். கருக்குழாயிலே கரு தங்கி வளர்ந்தால் அது ஆபத்தானதாகும். அதை `அல்ட்ரா சவுண்ட்` மூலம் கண்டுபிடித்து விடலாம். கருப்பையில் குழந்தை வளரத் தொடங்கிய பின்பு 12, 13 வாரங்களில் கர்ப்பகாலத்துக்கு தக்கபடி குழந்தையின் வளர்ச்சி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

கர்ப்பமான 24-28 வது வாரங்களில் தாயின் வயிற்றுக்குள் அம்னியோட்டிக் திரவம் அதிகமாக இருக்கும். அப்போது குழந்தை வயிற்றுக்குள் இருந்து சிரிப்பதையும், கை- கால்களை அசைப் பதையும், கொட்டாவி விடுவதையும், நாக்கை வெளியேதள்ளி அசைப்பதையும் 4-டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கில் பார்க்கலாம். அதைப் பார்க்கும்போது பெற்றோர் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். அவ்வளவு துல்லியமாக இருக்கும். இப்போது அதை பெற்றோர்கள் பதிவு செய்து வாங்கிச் சென்று, பாதுகாத்து தேவைப்படும் போதெல்லாம் போட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள். நாங்கள் மருத்துவரீதியாக இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை துல்லியமாக பார்க்கவே இந்த வகை ஸ்கேனை பயன்படுத்துவோம்.

36-38 வது வாரங்கள் கர்ப்பிணியை பொறுத்தவரையில் மிக முக்கிய காலகட்டமாகும். அந்த நேரத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் வயிற்றில் இருக்கும் அம்னியோடிக் திரவத்தின் அளவு, குழந்தையின் தலை சரியான பாதையில் திரும்பி வருதல், நஞ்சுக்கொடியின் நிலை போன்றவைகளை எல்லாம் ஆராய்ந்து அதற்கு தக்கபடி கர்ப்பிணிக்கு சுக பிரசவமா? சிசேரியனா என்று முடிவு செய்துவிடலாம்.

`டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன்` என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை, கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பை தெள்ளத்தெளிவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கருப்பை வாய் புற்றுநோயையும் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வாய்ப்பிருக்கிறது.

பெண்கள் இப்போதும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு வரும் குறிப்பிட்ட நோய்களைப் பற்றி வெளியே பேசவும், சிகிச்சை பெறவும் தயங்குகிறார்கள். அதுவே அவர்களது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் எதிரியாக அமைந்துவிடுகிறது. பெண்கள் நோயிடம் விழிப்புடன் இருந்து, தொடக்கத்திலே அதை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் மகிழ்ச்சியுடன் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்பிருக்கிறது. நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் அதற்கு துணைபுரிகிறது.201610151322540864 How to identify the impact of women for Infertility SECVPF

Related posts

அலர்ஜி… விரட்ட அருமையான வழிகள்!

nathan

மன அழுத்தத்தைக் குறைக்க வழிகள்!

nathan

உண்மையான காதல் என்றால் என்னனு தெரியனுமா இதை படிங்க!!

nathan

செவித்திறனை பாதிக்கும் நோய்கள்

nathan

மருத்துவ செய்தி 8 மருத்துவ குறிப்புகள்!

nathan

உங்க ஈறுகளில் இரத்தம் வடிகிறதா?அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

இந்த பூவின் மருத்துவ குணம் பற்றி தெரியுமா ??? அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… தினமும் வினிகர் கலந்த நீரில் பாதங்களை ஊற வைப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு

nathan