23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201610131113011791 drink tea without milk help you lose weight SECVPF
எடை குறைய

பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்

பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்
டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு. டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது.

சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

வயிற்றுவலி(அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.

ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் “ப்ளேவோனாய்ட்ஸ்” தடுப்பதாக நம்பப்படுகிறது,

இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.

டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.

மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது.

தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.
டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.

உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது.

உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.

உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப்படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.

எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்

பால் கலக்காத டீயில் ஒரு ஸ்லைஸ் லெமன் துண்டை நறுக்கிபோட்டு குடியுங்க பித்தம், பேதி, வயிற்று வலி மறைந்திடும்.201610131113011791 drink tea without milk help you lose weight SECVPF

Related posts

உங்களுடைய நிரந்தரமாக எடை இழக்க பயனுள்ள குறிப்புகள்

nathan

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில நார்ச்சத்துள்ள உணவுகள்!

nathan

ஜிம்முக்கு போகாமலே ‘ஜம்’ முனு ஆகலாம்!

nathan

குண்டு பெண்களே இது உங்களுக்கு..

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்கும் கொள்ளு

nathan

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்…

nathan

எடையை குறைக்க வைக்கும் இந்திய உணவுகள்

nathan

இடை மெலிய 2 எளிய உடற்பயிற்சிகள்

nathan

உடல் எடை குறைய என்ன உணவுகளை சாப்பிடலாம்

nathan