தொப்பை உணடாவதற்கான பழக்க வழக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.
உங்கள் வாழ்க்கை முறையை பாதிக்கும் என்று சில பழக்க வழக்கம் உள்ளதை இங்கே பார்க்கலாம். 7 பழக்க வழக்கங்களால், உங்கள் உடம்பில் அதிகமாக கொழுப்பு சேருவதோடு, அது உஙள் இடுப்பை சுற்றி தேவையற்ற அதிகமான சதையையும் அதாவது தொப்பையையும் உண்டாக்குகிறது, அவை எல்லாம் என்னவென்று கீழே பார்ப்போமா.
தேவையில்லாமல் உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது:
நீங்கள் ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்து விட்டு, அடுத்து சாப்பிடும் போது அதிகமான உணவை சாப்பிடுவீர்கள். எனவே இதனால் உங்கள் உடம்பில் தேவையற்ற கொழுப்பானது அதிகம் சேர்கிறது. எனவே சிறிது சிறிதாக மூன்று அல்லது நான்கு மணிக்கு ஒருமுறை சாப்பிடுவதால் உங்கள் உடலை ஒரே மாதிரியாக வைத்துக் கொள்வதுடன், தேவையற்ற கொழுப்பும் தொப்பையும் சேராது. ஊட்டச்சத்து நிபுணர் ஜிவேஷ் ஷெட்டி கூறுகையில், “உங்கள் உடம்பில் உயர் வளர்சிதை மாற்ற விகிதமானது எப்படி நடைபெறுகிறது என்றால், சிறிய அளவிலான உணவை ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை சாப்பிடுவதால், அதிகப்படியான பசியின் அளவை கட்டுப்படுத்தி உணரச் செய்கிறது.”
குருட்டுத்தனமான குடிப்பழக்கம்:
நீங்கள் அளவிற்கு அதிகமாக குடிப்பதால், உங்கள் உடல் நிலை கூடிய சீக்கிரமே மோசமடைகிறது, இதற்கு நீங்களே காரணமாகிறீர்கள். மதுவில் நிறைய கலோரிகள் உள்ளன மற்றும் நீங்கள் அடிக்கடி மது குடிக்குப்பதால் பசியின் அளவு அதிகரிக்கிறது. நீங்கள் நண்பர்களுடன் வெளியே குடிக்க போகிறீர்கள் என்றால், நீங்கள் சிவப்பு ஒயினை தேர்வு செய்து குடிப்பது நன்று – அது தொப்பையை குறைக்க உதவுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் நமிதா நானல் கூறுவதாவது, “மிதமான மதுவை குடிக்கும் போது உடல் எடை பராமரிப்பு நன்றாக இருக்கும். அதிலும் நீங்கள் ஒயினை மட்டும் சாப்பிடுவது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றத்திற்கு சரியாக இருக்கும்.”, என்கிறார்
க்ரஞ்சஸ் பைத்தியம்:
உட்கார்ந்து கொண்டே இருப்பதால் உங்கள் உடல் எடை அதிகமாவதோடு, கொழுப்பும் அதிகமாகிறது. 50 அல்லது 100 க்ரஞ்சஸ் என்றாலும் உங்கள் ஜீன்ஸ் உங்களுக்கு உடனே தளர்வாகி விடாது. இதற்கு தினமும் நீங்கள் பூங்காவில் நடைப்பயிற்சி அல்லது தினசரி தொப்பை குறைய டிரெட்மில்லில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. நானல் சொல்வது “இதற்கு அதிக க்ரஞ்சஸ் மட்டும் உதவாது. நீங்கள் வேகமாக கொழுப்பு இழக்க வேண்டும் என்றால் சரியான அளவு விகிதத்தில் நாம் உண்ணும் உணவு இருப்பது ஒரு நல்ல கலவை.”, என்கிறார்
லேசான பொருட்களை உட்கொள்ளுங்கள்:
சர்க்கரை இல்லாத இனிப்பு, தயிர், குறைந்த கொழுப்பு சிற்றுண்டி அல்லது பத்திய சோடாக்கள் போன்றவற்றை தேர்வு செய்வது நன்மை பயக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த செயற்கை இனிப்புகள் உங்கள் உடலில் கொழுப்பை அதிகம் சேமிப்பதோடு, உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் தூண்டலாம்.