29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201610140806580886 Smart Digital Locker for hand SECVPF
மருத்துவ குறிப்பு

நம்மோடு எடுத்து செல்லகூடிய கையடக்க டிஜிட்டல் லாக்கர்

வீட்டில் தற்போது விலையுயர்ந்த ஆபரணங்கள், பணம், வெள்ளி பொருட்களை பாதுகாக்க ஏதுவாக பலதரப்பட்ட டிஜிட்டல் லாக்கர்கள் வந்துள்ளன.

நம்மோடு எடுத்து செல்லகூடிய கையடக்க டிஜிட்டல் லாக்கர்
வாழ்க்கையில் நாம் சேர்க்கும் செல்வங்களை பாதுகாப்பதில் அதிக சிரமபடுகிறோம். எப்படியாயினும் ஏதேனும் ஓர் வகையில் அன்றாட வாழ்கையில் தமது பொருட்களை இழப்பது என்பது அனைவருக்கும் நடக்கின்றது. விலையுற்ற ஆபரணங்கள் சாதாரண கைபேசி வரை அனைத்து பொருட்களையும் பாதுகாப்பது பெரிய விஷயமாக உள்ளது.

வீட்டில் தற்போது விலையுயர்ந்த ஆபரணங்கள், பணம், வெள்ளி பொருட்களை பாதுகாக்க ஏதுவாக பலதரப்பட்ட டிஜிட்டல் லாக்கர்கள் வந்துள்ளன. டிஜிட்டல் லாக்கர்களை கையாள்வது சுலபம். அவற்றில் இருந்து அவ்வளவு சுலபமாய் பொருட்களை திருடவோ, வெளியே எடுக்கவோ முடியாது எப்படி கஷ்டப்பட்டு பொருட்களை சம்பாதிக்கிறோமோ அதுபோல் கஷ்டப்பட்டு பாதுகாத்த காலம் மலையேறிவிட்டது.

நவீன டிஜிட்டல் லாக்கர்களின் துணையுடன் கவலையின்றி நம் வாழ்கை சுகமாக அமைகிறது என்பதே உண்மை. வீட்டில் பெரிய டிஜிட்டல் லாக்கர்களை கொண்டு பொருட்களை பாதுகாத்து விடுவோம். நமது தனிப்பட்ட அன்றாட விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பது எப்படி? இந்த கேள்விக்கு விடையாய் முற்றிலும் சிறிய அளவிலான டிஜிட்டல் லாக்கர் வந்துள்ளது. இதனை நாம் கையிலேயே எடுத்து கொண்டு செல்லலாம். நமது பணம், பர்ஸ், வாட்ச், செயின், மொபைல்போன் போன்ற அன்றாட பயன்பாட்டு பொருட்கள் அனைத்தும் இதன் மூலம் பாதுகாக்க முடியும்.

தினசரி பயன்பாட்டிற்கு உகந்த தனிநபர் லாக்கர் :

நாம் வியாபாரம் மற்றும் அலுவலக பணிகள் காரணமாய் தினம் தினம் அதிக நேரம் வெளியிடங்களில் செலவிடுகிறோம். அவ்வாறு செல்லும் போது நாம் பயன்படுத்தும் விளையுயர்ந்த பொருட்களை கார் சாவி, கிரெடிட் கார்டு, கடிகாரம், கண்ணாடி, விலையுயர்ந்த பேனா, பாஸ்போர்ட், வங்கி புத்தகங்கள், சில நகைகள், மொபைல் போன்றவற்றை பாதுகாத்திட ஏற்றவாறு தனிபட்ட லாக்கர் நம்மிடம் நல்லது. அதற்கான தீர்வாய் தனிநபர் எடுத்து செல்லக்கூடிய கையடக்க லாக்கர் வந்துள்ளன. முற்றிலும் உலோக தகடால் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் லாக்கர் அழகிய வடிவமைப்புடன் உள்ளது.

தனி நபர் லாக்கரின் தனிப்பட்ட சிறப்பம்சங்கள் :

பளபளப்பான கடினமான உலோக மேற்புற அமைப்புடன் எங்கும் எடுத்து வசதியான இந்த லாக்கரில் ஸ்மார்ட் டச் பேனல், ஆன்டி தெப்ட் பஸர், ஸ்மார்ட் லாக்கிங் கேபிள் போன்ற இயக்க வசதிகள் உள்ளன. உட்புற அழகிய வண்ணத்தில் வெல்வெட் துணியால் செய்யப்பட்ட மென்மையான அமைப்பு உள்ளது.

சிறிய கையடக்க பெட்டி அமைப்பில் உள்ள இந்த லாக்கரின் முன்புற உள்ள தொடுதிரை நம்பர்கள் மூலம் எண்களை அழுத்தி லாக் செய்து கொள்ளலாம். மேலும் இந்த எண்கள் மூலம் மட்டுமே இந்த லாக்கரை திறக்க முடியும்.

இந்த லாக்கரை யாரும் தூக்க முயற்சித்தால் உடனே அலாரம் எழுப்பி எச்சரிக்கை செய்யும், இதனை கீழே போட்டாலும் உடைந்து விடும் என்ற பயமில்லை, மேலும் இந்த லாக்கரை கூடுதலாக லாக் செய்ய வசதியாக லாக்கிங் கேபில் வசதி உள்ளது. தனிநபரின் பொருட்களை பாதுகாக்க வசதியான அழகிய லாக்கர் மூலம் எவ்வித பயமின்றி பணிகளை மேற்கொள்ளலாம். 201610140806580886 Smart Digital Locker for hand SECVPF

Related posts

மலட்டுத் தன்மையை குணமாக்கும், ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை மருத்துவம்

nathan

பெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் ‘கடலை எண்ணெய்’…!

nathan

சிகரெட்டால் வரும் நோய்கள்

nathan

சாம்பல், வெளிர் மஞ்சள், வெள்ளை… காது அழுக்கின் நிறங்கள் அறிவுறுத்தும் உடல்நலம்!

nathan

குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த சாறு சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க உதவுகிறதாமே!

nathan

ஆண்களை விட பெண்களின் மூளைக்கு சக்தி அதிகம் : உங்களுக்குத் தெரியுமா?

nathan

நீங்கள் தினமும் கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா?அப்ப இத படிங்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் இதையெல்லாம் செய்யலாம்

nathan