29 C
Chennai
Saturday, Jun 29, 2024
201610121401421770 body Pain reason gastric problem SECVPF
மருத்துவ குறிப்பு

உடலில் ஏற்படும் வலிகளுக்கு வாயு தொல்லை காரணமா?

வயிற்று வலி, நெஞ்சு வலி, தசை வலி என எல்லா உடல் வலிகளுக்கும் வாயுக்கும் தொடர்பில்லை.

உடலில் ஏற்படும் வலிகளுக்கு வாயு தொல்லை காரணமா?
அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் பிரச்சினையை ‘வாயுத் தொல்லை’ (Flatulence) என்கிறோம். இது வயிற்றில் மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்சினை. ஆனால், பொதுவாக வாயுவுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சு வலி, முதுகு வலி, முழங்கால் மூட்டு வலி, விலா வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி என உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.

வாயு எப்படி உற்பத்தியாகிறது எனும் அறிவியலைத் தெரிந்துகொண்டால் இதன் உண்மை புரியும். நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதையிலும் உணவுப் பாதையிலும் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக்கொண்டிருப்பது போலத் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டிருப்பது இல்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.

நாம் அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப்பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

குடலில் உணவு செரிக்கும்போது அங்குள்ள தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் மூலம் பல வேதிமாற்றங்களை ஏற்படுத்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இப்படி நாள்தோறும் சுமார் ஏழு லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, ரத்தத்தில் இது உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாகக் குடலில் 600 மி.லி. வாயு இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நல்லதுதான்.

சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் பிரியும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்க்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாகக் கெட்ட வாடையுடன் வெளியேறும்.

புரத உணவுகள், கிழங்குகள், வெங்காயம், முட்டைக்கோஸ், பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற காய்களை அதிகமாகச் சாப்பிடுவதாலும், மலச்சிக்கல், அமீபியாசிஸ், குடல் காசநோய், புற்றுநோய் போன்றவற்றாலும் வாயு அதிகமாகலாம்.201610121401421770 body Pain reason gastric problem SECVPF

Related posts

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

nathan

இயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம்

nathan

ஒரே மருந்தில் உங்களை மூப்பு மற்றும் வியாதிகளிலிருந்து காக்க முடியும்!! அந்த ராஜ மருந்து எது தெரியுமா?

nathan

பல் கவனம்… உடல்நலத்துக்கு உதவும்! நலம் நல்லது!

nathan

ஃபீல் ஃப்ரெஷ்! டீடாக்ஸ் சிகிச்சைகள் கம்ப்ளீட் கைடு!!

nathan

நீங்கள் அடிக்கடி வெந்நீர் குடிப்பவரா ? அவசியம் படிங்கள்….

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

உங்க கண் ஓரத்தில் உருவாகும் பீழை உங்க ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா அப்ப இத படிங்க!?

nathan

குரங்கம்மை எப்படி பரவுகின்றது? அதன் அறிகுறிகள் என்ன?

nathan