25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
1449822528 8999
சிற்றுண்டி வகைகள்

சுறாப்புட்டு

எல்லா சீசனிலும் கிடைக்கும் இந்த வகை மீனை கொண்டு புட்டு செய்யலாம்.

தேவையானவை:

சுறா – அரை கிலோ
வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் – 300 கிராம் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
பூண்டு – ஒரு கைப்பிடி (உரித்து பொடியாக நறுக்கியது)
இஞ்சி – ஒரு பெரிய அளவு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 6 (பொடியாக நறுக்கியது)
மிளகு – 2 டீஸ்பூன் (தூள் செய்து கொள்ளவும்)
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சுறாவை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு வைத்தால், தோலை எளிதில் உரித்து விடலாம்.

பிறகு சுறாவை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக விடவும். சுறா வெந்ததும் ஆற வைத்து முள் நீக்கி உதிரி உதிரியாக செய்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் உதிர்த்த சுறாவை சேர்த்துக் கிளறி போதுமான அளவு மிளகுதூள், உப்பு சேர்த்து. சுறா வெந்து உதிரி உதிரியாக முட்டைபொறியல் போல் வந்ததும் மேலே பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி விடவும். இப்போது சுறாப் புட்டு தயார்.

குறிப்பு:
காரம் தேவைப்பட்டால் சிறிது மிளகாய் தூள் தூவி கலந்து கொள்ளலாம்.1449822528 8999

Related posts

சுவையான ஜிலேபி,

nathan

சேமியா பொங்கல்

nathan

பழநி பஞ்சாமிர்தம்

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்

nathan

சத்தான ஸ்நாக்ஸ் தினை – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

மழைக்கேற்ற வாழைப்பூ வடை

nathan

இட்லி மஞ்சுரியன்

nathan

சத்தான முளைகட்டிய நவதானிய சுண்டல்

nathan