25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201610070957135608 Amla oil to prevent hair fall completely SECVPF
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்வை முற்றிலும் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

முடி உதிர்வை முற்றிலும் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்
இன்றைய காலத்தில் ஒவ்வொருவருக்கும் தலைமுடி பிரச்சனை உள்ளது. இதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை காரணங்களாகும். மேலும் தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காமல், தலைமுடி வலுவிழந்தும், ஆரோக்கியமிழந்தும் உள்ளது.

எனவே முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களால் தலைமுடியைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அதில் ஒன்று தான் நெல்லிக்காய் எண்ணெய். இந்த எண்ணெயால் தலைமுடி பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

இப்போது நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஷாம்புவுடன் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள். இதனால் ஸ்கால்ப் வறட்சியடைந்து, முடி உடைவது தடுக்கப்படும்.

தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், நீரில் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து பின் அலச வேண்டும். இதனால் முடி பட்டுப் போன்று இருக்கும்.

தலைக்கு ஷாம்பு பயன்படுத்ய பின், சிறிது நெல்லிக்காய் எண்ணெயை முடியின் முனைகளில் தடவ வேண்டும். இதனால் முடி வறட்சியடைந்து மென்மையிழந்து காணப்படுவதைத் தடுக்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெய் நரைமுடியைப் போக்கும் திறன் கொண்டது. மேலும் பழங்காலத்தில் இருந்து நரைமுடியைப் போக்க நெல்லிக்காய் எண்ணெய் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆகவே நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து வர, முடி நரைப்பதைத் தடுக்கலாம்.

பொடுகுத் தொல்லையால் அடிக்கடி அவஸ்தைப்படுபவர்க்ள, நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், பொடுகு வருவதை முற்றிலும் தடுக்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெய் முடி வெடிப்பைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் முடியின் முனைகளில் தடவி வர, பாதிக்கப்பட்ட முடியின் முனைகள் சரிசெய்யப்பட்டு, முடி வெடிப்பது தடுக்கப்படும்.201610070957135608 Amla oil to prevent hair fall completely SECVPF

Related posts

தெரிஞ்சிக்கங்க… முடி கொட்டுவதைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம்?

nathan

கூந்தலுக்கு ஊட்டச்சத்தையும் கொடுக்கும் செம்பருத்தி எண்ணெய்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்

nathan

நீங்கள் கூந்தல் அழகியாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்..

nathan

கூந்தலை எப்படி வார வேண்டும்?

nathan

உங்களுக்கு ஹேர் டை போட்டபின் பிடிக்கலையா? பழைய நிறத்திற்கு மாறுவதற்கு சில டிப்ஸ்

nathan

நரை முடி வர ஆரம்பித்துவிட்டதா?

nathan

பலவீனமான முடியை வலிமையாக்க உதவும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

nathan

பட்டுப்போன்ற தலை முடிக்கு முட்டை ஹேர் பேக்

nathan