26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
201610060710547542 Navratri Special nei appam SECVPF
சிற்றுண்டி வகைகள்

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

நவராத்திரி கொலு பார்க்க வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வித்தியாசமான நெய் அப்பம் செய்து கொடுத்து அசத்தலாம்.

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்
தேவையான பொருட்கள் :

அரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
வாழைப்பழம் – 2
ஏலக்காய் – 4
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – அரை கப்

செய்முறை :

* அரிசியைச் சுத்தம் செய்து ஊறவைத்து, கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

* வெல்லத்தைக் கரைத்து, கெட்டிப் பாகாக உருக்கி, அதை அரிசிமாவில் விட்டுக் கலந்துகொள்ளுங்கள்.

* இந்தக் கலவையுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, சோடா உப்பு, வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.

* பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு உருகியதும், பாதி அளவுக்கு மாவு விடுங்கள். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு, பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறுங்கள். 201610060710547542 Navratri Special nei appam SECVPF

Related posts

சுவையான நூடுல்ஸ் பக்கோடா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜி

nathan

ஹேவ் எ ஹெல்தி அண்ட் ஹேப்பி ஃபேமிலி!

nathan

பிட்டு

nathan

சூப்பரான அரிசி பொரி உப்புமா

nathan

மஷ்ரூம் கட்லட்

nathan

மைக்ரோவேவ் அவன் சமையல் பாதுகாப்பானதா?

nathan

சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்

nathan

மரவள்ளிக்கிழங்கு உருண்டை

nathan