25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1475653424 5177
சைவம்

உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 4
காலிப்ளவர் – 1
வெங்காயம் – 2
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி நசுக்கியது – 1 டீஸ்பூன்
பூண்டு நசுக்கியது – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கீற்று
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை சிறிய துண்டுகள் செய்து அரை வேக்காடாக வேகவைக்கவும். காலிப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும். பிறகு நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு அதில் உருளைகிழங்கு காலிப்பிளவர் பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி சிறிது நீரை தெளித்து மூடி போட்டு வேகவிடவும். காய்கள் நன்கு வெந்தவுடன் ட்ரையாக வந்ததும் கிளறி விட்டு இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல் தயார்.

குறிப்பு:

இதே முறையில் கொஞ்சம் கிரெவியாக வேண்டும் என்றால் அதனுடன் 2 தக்காளியை சேர்த்து வதக்கினால் போதும்.1475653424 5177

Related posts

அரிசி பருப்பு சாதம்

nathan

பத்திய சமையல் / கூரவு தோசை / கார சட்னி / புளி இல்லா கறி!

nathan

கீரை கூட்டு

nathan

வெட்டிமுறித்த காய்கறி குழம்பு

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்

nathan

மிளகு காளான் வறுவல்

nathan

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

nathan

பாசிப்பருப்பு வெங்காய தோசை

nathan

பொடித்த மிளகு சாதம்

nathan