26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
vazhaipoopodimas 01 1451637626
சைவம்

வாழைப்பூ பொடிமாஸ்

வாழைப்பூ உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் அதனை பொடிமாஸ் செய்து சாப்பிட்டால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு வாழைப்பூ பொடிமாஸ் செய்யத் தெரியாது என்றால் தொடர்ந்து படியுங்கள். இங்கு அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரெசிபியின் ஸ்பெஷல் வாழைப்பூவை மோரில் ஊற வைத்து சமைப்பது. சரி, இப்போது அந்த வாழைப்பூ பொடிமாஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1 (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது) மோர் – 1/4 கப் பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது) பூண்டு – 6 பற்கள் கறிவேப்பிலை – சிறிது மஞ்சள் தூள் – 1 சிட்டிகை துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2-3 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு… முந்திரி – 10-15 வேர்க்கடலை – 1/2 டேபிள் ஸ்பூன் பட்டை – 1/2 இன்ச் கிராம்பு – 2 சோம்பு – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

செய்முறை: முதலில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை மோரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, பின் ஊற வைத்துள்ள வாழைப்பூவை வடிகட்டி, வாணலியில் போட்டு வதக்க வேண்டும். பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, வாழைப்பூவை மென்மையாக வேக வைக்க வேண்டும். நீரானது முற்றிலும் வற்றி வாழைப்பூ நன்கு வெந்ததும், அதில் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து 2 நிமிடம் கிளறி, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், வாழைப்பூ பொடிமாஸ் ரெடி!!!

vazhaipoopodimas 01 1451637626

Related posts

வெண்டைக்காய் – ஓமம் மோர்க் குழம்பு

nathan

தயிர் சாதம் பிராமண சமையல்

nathan

பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…

nathan

கத்திரிக்காய் பிரியாணி,

nathan

காளான் லாலிபாப்

nathan

சுவையான பச்சை பயறு மசாலா

nathan

சீரக சாதம்

nathan

ஃபிரஞ்ச் ஃப்ரை

nathan

வெந்தயக் குழம்பு/ vendhaya kuzhambu

nathan