குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் அன்னாசி பழ ஜாம் செய்யலாம்.
குழந்தைகளுக்கான அன்னாசி பழ ஜாம்
தேவையான பொருட்கள் :
அன்னாசிப் பழம் – 1 (நடுத்தர அளவு)
சர்க்கரை – 2 கப்
மஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி
அன்னாசி எசன்ஸ் – 1 தேக்கரண்டி
செய்முறை :
* அன்னாசிப் பழத்தின் மேல் மற்றும் கீழ் முனையை வெட்டி விட்டு, தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* அன்னாசி துண்டுகளை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.
* சர்க்கரை கரைந்த உடன் அதில் பின் ஃபுட் கலர், அரைத்து வைத்துள்ள அன்னாசி விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
* சிறிது கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அடுத்து அதில் அன்னாசி எசன்ஸ் சேர்க்கவும்.
* சற்று கொட்டியானதும் தீயை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு நன்கு கிளறவும்.
* இதனை சிறிது நேரம் குளிர வைத்து ஆறியதும் அதனை காற்றுப் புகாத டப்பாவில் மூடி வைத்து பயன்படுத்தலாம்.