24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகு குறிப்புகள்:அழகு தரும் பூ…

alagu-630x350சிவப்பாக மாற:

இதற்கு கடல்பாசி அருமையான பலன் தரும். சருமத்தின் மூலக்கூறு அமைப்பு மிகச் சிறியது. கடல்பாசி அதன் வழியே உள்ளே ஊடுருவும். ரத்தத்தில் கலந்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். கிரீன் ஆல்கே அல்லது ஸ்பைருலினா(Spirulina)என்கிற பெயரில் கிடைக்கும் கடல்பாசியில் க்ளோரோஃபில்(Chlorophyll) அதிகமாக உள்ளது.

முதலில் முகத்தை கிளென்ஸ் செய்யவோ, சுத்தமாகக் கழுவவோ வேண்டும். ஸ்பைருலினா மாத்திரை 2 அல்லது 3 எடுத்து, அதை 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் பன்னீருடன் சேர்த்துக் குழைக்கவும். முகம், கழுத்து, கறுத்துப்போன இடங்கள் என எல்லாப் பகுதிகளிலும் தடவவும். இதன் வாசனை கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கும். அதை ஈடுகட்ட அத்துடன் 1 துளி லாவண்டர் ஆயில் கலந்து கொள்ளலாம். அரைமணி நேரம் ஊறியதும், குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். சருமம் உடனடி சிவப்பழகு பெற்றுள்ளதை உணரலாம்.

பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற தலாசிக் சிகிச்சையும் நல்ல பலன் தரும். கடல்பாசி கொண்டு தயாரிக்கப்பட்ட கிளென்சர்(Cleanser), டோனர்(Toner), மாயிச்சரைசர் உபயோகித்து, மசாஜ் செய்யப்பட்டு, பேக் போடப்படும்.

முகத்தில் கருமையான திட்டுகள்:

நிறையப் பெண்களுக்கு இன்று இந்தப் பிரச்னை இருக்கிறது. கல்லீரல் பிரச்சனைகள், ஹார்மோன் கோளாறுகள், கர்ப்பக் கால பிரச்னைகள், கருத்தடை மாத்திரைகள் எடுப்பது, வேறு ஏதேனும் மருந்து, மாத்திரைகளின் பின்விளைவு, சூரியனின் புற ஊதாக் கதிர்களின் பாதிப்பு, வைட்டமின் ஏ, சி, பி 12 மற்றும் புரோட்டீன் குறைபாடு என இப்பிரச்னைக்கு நிறைய காரணங்கள் உண்டு.

கன்னங்கள், நெற்றி, வாய் பகுதியைச் சுற்றி உண்டாகும் கருந்திட்டுகளுக்கு “மெலாஸ்மா” எனப் பெயர். மன உளைச்சலும், அதிக உழைப்பும் இதை அதிகமாக்கும்.

வெயிலில் அதிகம் அலைவதால் உண்டாகிற கருந்திட்டு, வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரவுன் நிறத்தில் காட்சியளிக்கும். கண்களுக்கடியில் உண்டாகும் கருவளையம் கூட ஒருவகை கருந்திட்டுதான். இது பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியது. கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும், ரத்த சோகைப் பிரச்னையாலும் இது தீவிரமாகும்.

மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின், ஏ,சி மற்றும் இரும்புச் சத்து நிறைந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். கற்றாழை ஜெல் உபயோகிப்பதும் பலன் தரும். வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டியது மிக முக்கியம்.

பியூட்டி பார்லர்களில் கால்வானிக் சிகிச்சை(Galvanic Treatment)மேற்கொள்ளலாம். மைக்ரோடெர்மாப்ரேஷன் சிகிச்சையும் இதற்கு உதவும். ஆல்ஃபா ஹைட்ராக்சி(Alpha Hydrox) கலந்த கிரீம்களும், வைட்டமின் சி கலந்த கிரீம்களும், அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையுடன் உபயோகிக்கலாம்.

பூக்களை உபயோகித்து அழகு சிகிச்சை:

பூக்களை உபயோகித்துச் செய்கிற பல சிகிச்சைகள் அழகுக் கலையில் பிரபலம். மிக எளிமையாக நீங்கள் வீட்டிலேயே செய்யக் கூடிய ஒரு மலர் சிகிச்சையைப் பார்க்கலாம்.

100 கிராம் சாமந்திப் பூவை 1 லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் போட்டு, மூடி வைக்கவும். நீராவி வெளியே செல்லாமலிருக்கட்டும். 2 மணி நேரம் கழித்து அதை வடிகட்டி, ஆறவிடவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்யவும். இதில் பஞ்சை நனைத்து முகம் முழுக்க ஒற்றியெடுக்கவும். 2, 3 முறை இதே போலச் செய்யவும். இது உங்கள் முகத்தை மாசு, மருவின்றி பளிச்சென மாற்றும். முகத்திலுள்ள தழும்புகள், வடுக்களைப் போக்கி, மிருதுவாக்கும்.

இதே முறையில் ரோஜா இதழ்களை உபயோகித்தும் செய்யலாம். மிகச் சுலபமான, செலவில்லாத இந்தச் சிகிச்சை உங்கள் சரும அழகை மேம்படுத்தும்.

கண்களுக்கடியில் கருவளையம்:

கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மென்மையானது. அங்கே கொழுப்புத் திசுக்கள் குறைவு. கண்களைக் கைகளால் அழுத்தி, அடிக்கடி தேய்க்கக் கூடாது. அடிக்கடி கண்களைக் குளிர்ந்த தண்ணீரால் கழுவலாம். வெள்ளரிக்காய் சாறும், டீ டிகாக்ஷனும் கலந்த கலவையில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்வது. கண்களின் களைப்பைப் போக்கி, கருவளையங்களைக் குறைக்கும்.

பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற “ஐ ஸோன்” சிகிச்சை இதற்கு மிக நல்லது. ஆக்ஸிஜன் கலந்த சிரம் தெரபியான இது கருவளையங்களை நீக்கும். பாதாம் எண்ணெயால் மசாஜ் செய்யப்பட்டு, கண்களைச் சுற்றி ஃபாயில் பேப்பர் வைக்கப்படும். அந்த இடத்தில் வெப்பம் பரவும். பிறகு 2 நிமிடங்களுக்கு இன்ஃப்ரா ரெட் லைட் காட்டப்படும். கேரட்டும், வெள்ளரிக்காயும் கலந்த மாஸ்க் போடப்பட்டு, அந்த இடம் குளுமையாக்கப்படும்.

கருவளையங்களைத் தவிர்க்க தினசரி 8 மணி நேரத் தூக்கம் அவசியம். யோகா பயிற்சிகளும் உதவி செய்யும். கண்களை 30 முறை சிமிட்டலாம். சுத்தமான தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆறவைத்து, ஃபில்லரில் நிரப்பி, கண்களுக்குள் விடலாம். கண்களுக்கான லோஷன்கள் கிடைக்கின்றன. அதையும் உபயோகிக்கலாம். கனிந்த வாழைப்பழத்தை மசித்து, கண்களுக்கு மேல் வைத்து, ஒரு மெல்லிய துணியால் கட்டிக் கொண்டு 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். பிறகு சுத்தமாகத் துடைக்கலாம். இதெல்லாம் கருவளையங்களைக் காணாமல் போக வைக்கும்.

Related posts

கவர்ச்சியான கைகளுக்கு இதை முயன்று பாருங்கள்…

nathan

உங்க சருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு ஏற்ற கைவைத்தியம் முயன்று பாருங்கள்!!!

nathan

வீட்டிலேயே நாமாகவே ஃபேஷியல் செய்யும் முறை

nathan

உல்லாசத்திற்கு அழைத்த முன்னாள் அமைச்சர் : ஸ்வப்னா சுரேஷ்

nathan

சூப்பரான முந்திரி காளான் மசாலா:

nathan

சில அற்புத அழகு டிப்ஸ்! வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு என்றும் அழகுடன் எப்படி இருப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.

nathan

வீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்

nathan

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த விதவை பெண் அடித்துக்கொலை…

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? உடனே மருத்துவரை அணுகவும்

nathan