26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201609191320470692 Men need to following things SECVPF
உடல் பயிற்சி

ஆண்கள் பிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்

ஆண்கள் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆண்கள் பிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்
குடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும். எனவே ஆண்கள் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதற்கு 24 மணிநேரமும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்பதில்லை. அன்றாடம் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவதோடு, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இங்கு ஃபிட்டாக இருப்பதற்கு ஆண்கள் தினமும் பின்பற்ற வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரவில் நீண்ட நேரம் டிவி, மொபைல் அல்லது லேப்டாப் என்று பயன்படுத்தாமல், சீக்கிரம் தூங்கச் செல்ல வேண்டும். இப்பழக்கத்தை தினமும் ஆண்கள் மேற்கொண்டு வந்தாலேயே போதும் பல உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆண்களிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கமே, தினமும் போதிய அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாதது தான். எனவே இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் வேகமாக எழும் பழக்கத்தைக் கொள்வது பல நன்மைகளை ஆண்களுக்கு வழங்கும்.

ஜங்க் உணவுகள் அல்லது ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குறிப்பாக சுவைக்காக சாப்பிடாமல், ஆரோக்கியத்திற்காக சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். அதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

குடிக்கும் நீரின் அளவு மிகவும் முக்கியமானது. ஆண்கள் இதில் மிகவும் மோசம். சில ஆண்கள் ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் நீரைக் கூட குடிப்பதில்லை. இப்படி குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு, உடலில் நச்சுக்களின் அளவும் அதிகரிக்கும். ஆகவே தினமும் தவறாமல் 2-3 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டியது அவசியம்.

அக்காலத்தில் பரிசோதனை தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் நோய்கள் ஏராளமாக உள்ள இன்றைய காலத்தில் வருடத்திற்கு ஒருமுறையாவது உடலை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்கள் இச்செயலைத் தவறாமல் செய்ய வேண்டும். இதன் மூலம் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.

இன்றைய காலத்தில் உடல் உழைப்பு என்பதே இல்லை. உடலுக்கு உழைப்பு இருந்தால் தானே கொழுப்புக்கள் கரையும். அது கரையாமல் இருந்தால், உடல் பருமன் அதிகரித்து அதனாலேயே பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தினமும் குறைந்தது 1/2 மணிநேரமாவது ஆண்கள் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

பல ஆண்கள் சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்வதில்லை. இப்படி சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் போவதோடு, அல்சர் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளும் பழக்கத்தை ஒவ்வொரு ஆணும் பின்பற்ற வேண்டும்.201609191320470692 Men need to following things SECVPF

Related posts

நீங்கள் உடல் எடையை குறைக்கனும் இல்லையென்றால் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?

sangika

யோகா செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை!

nathan

நடைப்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

nathan

வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வாயு முத்திரை

nathan

தொப்பையை குறைக்க இலகுவான ரஸ்யன் ருவிஸ்ற் பயிற்சி

nathan

கலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா? சைக்கிள் பயிற்சியா?

nathan

தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்

nathan

தொடைப் பகுதியை வலுவாக்கும் அர்த்த உட்கடாசனம்

nathan

உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

nathan