201609160917498194 Nerves are strongly Boat Pose SECVPF
உடல் பயிற்சி

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்

இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்
செய்முறை :

விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக்கொள்ளவும். இது ஆரம்பநிலை. ஆழமாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். சுவாசத்தை உள்ளடக்கி, இரு கால் மற்றும் கைகளைத் தரையில் இருந்து 15 செ.மீ. மேலே தூக்கவும். அதே நேரம் கழுத்து மற்றும் தோள்பட்டையை உயர்த்தி கால் விரல்களைப் பார்க்கவும்.

புட்டப்பகுதியில் உடலை சமநிலைப்படுத்தி நிற்பது இறுதிநிலை. உடல் ஒரு படகு போல இருப்பதால் இதற்கு நெளகாசனம் என்று பெயர்.

10 விநாடிகள் இறுதி நிலையில் நின்று பின் மெதுவாக சுவாசத்தை வெளியேற்றி ஆரம்பநிலைக்கு வரவும். 3 – 5 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.

பயன்கள் :

இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.
டென்ஷனை குறைத்து ஓய்வளிக்கிறது. காலை எழுந்தவுடன் செய்தால் சோம்பல் நீங்கி உடனடி புத்துணர்வு கிடைக்கும்.
வயிற்றுத் தசைகளை இறுக்கம் அடையச் செய்வதனால் எடை குறைய உதவுகிறது

இந்த ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதால் உடலளவில் மட்டுமல்ல… மன அளவிலும் பல நன்மைகள் உண்டு. ஆழ்மன அச்சத்தை உடைத்து நமது ஆளுமைத்திறனை மேம்படுத்துகிறது. வயிற்றுப்பகுதியில் ஆரோக்கியமான அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ஜீரண மற்றும் இனப்பெருக்க மண்டல உறுப்புகள் அனைத்தையும் சீராக இயங்கச் செய்கிறது.201609160917498194 Nerves are strongly Boat Pose SECVPF

Related posts

நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்

nathan

அதிக காரம் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?

nathan

இடுப்பு வலியை குணமாக்கும் திரிகோணாசனா

nathan

வலிமை தரும் பயிற்சி

nathan

பெண்கள் எப்பொழுது வேண்டுமானலும் உடற்பயிற்சி செய்யலாமா

nathan

ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி

nathan

பெண்களின் கைகள், இடுப்பு, தோள்பட்டைக்கான உடற்பயிற்சிகள்

nathan

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் உடற்பயிற்சி

nathan

எடையைக் கட்டுக்குள் வைக்க, குடம்புளி!…

sangika