28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201609160941545308 mutton leg pepper paya SECVPF
அசைவ வகைகள்

ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி

மிளகு தூள் போட்டு செய்யப்படும் இந்த ஆட்டுக்கால் பாயா சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

ஆட்டுக்கால் – 2
தக்காளி – 4
வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மிளகுத்தூள் – 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் – 2 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* குக்கரில் வெங்காயம் போட்டு வதக்கிய பின்னர், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் ஆட்டுக்காலை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 விசில் போட்டு இறக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி 10 நிமிடன் கொதிக்கவிட்டு இறக்கவும்.

* பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

* இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!201609160941545308 mutton leg pepper paya SECVPF

Related posts

ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல்

nathan

விருதுநகர் மட்டன் சுக்கா

nathan

ஆட்டுக்கால் பாயா | attukal paya

nathan

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

nathan

கசகசா பட்டர் சிக்கன்

nathan

“நாசிக்கோரி”

nathan

சுவையான… முட்டை தொக்கு

nathan

சூப்பரான சைடு டிஷ் புதினா இறால் மசாலா

nathan

சுவையான சைடிஷ் நண்டு பொடிமாஸ்

nathan