26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201609161153504045 weakness of the bone disease in postmenopausal women SECVPF
மருத்துவ குறிப்பு

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு வரும் எலும்பு பலவீனம் நோய் – தடுக்கும் வழிகள்

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு வரும் எலும்பு பலவீனம் நோய் – தடுக்கும் வழிகள்
எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீன மடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.

35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.

எலும்புகள் கல் போன்று உறுதி கொண்டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

சுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும்.

மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.

நோயைத் தடுக்கும் முறைகள் :

நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.

மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும். உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையும் பண்களுக்கு எலும்பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.201609161153504045 weakness of the bone disease in postmenopausal women SECVPF

Related posts

சிசேரியனுக்கு பின் இரண்டாம் குழந்தையை எப்பொழுது பெற்றுக் கொள்ளலாம்?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கொய்யா…இதெல்லாம் மெய்யா?!

nathan

சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது!

sangika

பெண்கள் திருமணத்துக்குப் பிறகு இனிஷியலை மாற்ற வேண்டுமா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பெண்களே சிறுநீர் கசிவினால் கவலையா? அதிலிருந்து எப்படி விடுபடலாம்?

nathan

எதனால் ஏற்படுகிறது?..!! சினைப்பை புற்றுநோய்க்கான அறிகுறி என்ன?..

nathan

காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..

nathan

உங்களுக்கு தெரியுமா மாதவிடாயை தள்ளிப் போட உதவும் இயற்கை வைத்தியங்கள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா குப்பைமேனி இலையை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்..!!

nathan