29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201609161412364905 payatham paruppu curd bonda SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் பயத்தம் பருப்பு தயிர் போண்டா

மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சூப்பரான பயத்தம் பருப்பு தயிர் போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் பயத்தம் பருப்பு தயிர் போண்டா
தேவையானப் பொருட்கள் :

பயத்தம் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – ஒரு சிறு துண்டு
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு
தயிர் – 3 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும்.

*அரைத்த மாவில் பொடியாக நறுக்கி வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

* ஒரு அகன்ற பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைத்து, இறக்கி வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து எண்ணெயில் போடவும்.

* எண்ணெய் கொள்ளுமளவிற்கு 4 அல்லது 5 போண்டாவைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து, கொதிக்க வைத்துள்ள வென்னீரில் போடவும். போண்டா வென்னீரில் ஊறி சற்று மிருதுவானவுடன், ஒரு கரண்டியால் எடுத்து, இலேசாக பிழிந்து விட்டு, ஒரு தட்டில் பரவலாக அடுக்கி வைக்கவும்.

* தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, சிறிது உப்பைச் சேர்த்துக் கலக்கி, போண்டாவின் மேல் ஊற்றவும். அதன் மேல் மிளகாய்த்தூளைத் தூவி பரிமாறவும்.

* சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் பயத்தம் பருப்பு தயிர் போண்டா ரெடி.201609161412364905 payatham paruppu curd bonda SECVPF

Related posts

ராகி பால் கொழுக்கட்டை

nathan

இலகுவான அப்பம்

nathan

சோயா சன்க்ஸ் சாண்ட்விச்

nathan

மாலை வேளையில் வெங்காய வடை

nathan

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan

பழநி பஞ்சாமிர்தம்

nathan

வெந்தய தயிர் பச்சடி

nathan

சுவையான குடைமிளகாய் சாண்ட்விச்

nathan

திபாவளி ஸ்பெஷல் – சர்க்கரைப் பொங்கல்!

nathan