மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு முதலுதவியாக என்ன செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம்.
மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு… முதலுதவியாக என்ன செய்யலாம்..?
“மாரடைப்பிற்கு சிறந்த முதலுதவி… மருத்துவமனைக்கு விரைவது தான். இருப்பினும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சில வழிமுறைகள் இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை டபிள்யூ வடிவில் அமர வைத்து கொண்டு செல்ல வேண்டும். இப்படி செய்வதால் இதயத்தின் அழுத்தம் குறைந்து… வலி குறைய வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன் பாதிக்கப்பட்டவர் மயங்கிவிட்டால், சி.பி.ஆர்.சிகிச்சை கொடுக்கலாம்.
வலிப்பு நோய் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்குள் நின்றுவிடும். அந்தசமயத்தில் இரும்பு பொருட்களை கையில் பிடிக்க கொடுப்பதும், அவர்களின் கை-கால்களை அழுத்தி பிடித்து கொள்வதும், தவறான அணுகுமுறை. இந்த இடைபட்ட நேரத்தில் பாதிக்கப்பட்டவர் கல், கம்பம், சுவரில் இடித்து கொள்ளாமல் பார்த்து கொள்வது தான் அதிகபட்ச முதலுதவி. அவர்களின் தாடையை பிடித்து கொண்டால், நாக்கை கடித்து கொள்ளாமல் இருப்பார்கள்”