28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ht2296
மருத்துவ குறிப்பு

பல் வலிக்கு வீட்டில் இருக்கு மருந்து

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம். வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும். சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.

பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும். ht2296

Related posts

ஹெல்த் ஸ்பெஷல் குழந்தையின்மை காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

nathan

சிறுநீர் பற்றி அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா சொரியாசிஸ் நோய் வரக் காரணங்களும் அறிகுறிகளும்….!

nathan

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிந்துகொள்வோமா?

nathan

உச்சமடையும் ஒமிக்ரான் வைரஸ்.. அறிகுறிகள் என்ன? தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த அறிகுறிகள் வந்த பின்தான் ஹார்ட் அட்டாக் வருமாம்… ஜாக்கிரதையா இருங்க…!

nathan

பெண்களின் இந்த 6 முக்கிய அம்சங்கள் தான் ஆண்களைக் கவருகிறது என்று தெரியுமா?

nathan

சாதிக்கும் காய்… ஜாதிக்காய்!

nathan

தற்கொலை எண்ணம் வரக்காரணம் என்ன?

nathan