23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
2 09 1465463848
முகப் பராமரிப்பு

பீல் ஆஃப் மாஸ்க் வீட்டிலேயே செய்ய ட்ரை பண்ணியிருக்கீங்களா? இப்ப ட்ரை பண்ணுங்க ஈஸியா

சருமம் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு கடினமாக, சிலருக்கு மிருதுவாக. ஆனால் சிலருடைய சருமத்தை உற்று கவனித்தால், சருமத்தின் துவாரங்கள் நன்றாக தெரியும்படி பெரிதாகவே இருக்கும்.

இந்த மாதிரி பெரிய துவாரங்கள் உள்ள சருமம் நிறைய பிரச்சனைகளை தரும். அழுக்கு, இறந்த செல்கள், பேக்டீரியா ஆகியவை துவாரத்தில் அடைபட்டு வெளிவராது.

இதனால் முகப்பரு, கரும்புள்ளி, கருமை ஆகியவை ஏற்படும். முதுமையை எளிதில் அளித்துவிடும். இவற்றினை பீல் ஆஃப் மாஸ்க் கொண்டு அகற்றலாம்.

ஆனால் அதனை ஏன் காசு கொடுத்து கடைகளில் வாங்க வேண்டும். உங்களுக்கே தெரியும் அதிலிருக்கும் ரசாயனம் சருமத்திற்கு கேடுவிளைவிக்கும் என்று… பின் என்ன செய்யலாம்? இப்படி நம் வீட்டிலேயே இந்த மாஸ்க்கை தயாரிக்கலாம்.

தேவையானவை : முட்டையின் வெள்ளைக் கரு – 1 எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் பிரஷ் -1 மெல்லிய டிஷ்யூ தாள் – தேவையானவை

முட்டையின் வெள்ளைக்கருவை தனியே எடுத்து, அதில் தேன், எலுமிச்சை சாற்றினை சேருங்கள். பின் நன்றாக கலக்கி, பிரஷ்ஷைக் கொண்டு, முகத்தில் தடவவேண்டும்.

கண்கள், வாய் பகுதியை தவிர்த்து மீதி இடங்களில் லேயராக தடவ வேண்டும். பிறகு அதன் மேல் மெல்லிய டிஷ்யூ தாளை படரச் செய்யுங்கள்.

20 நிமிடங்களுக்கு பிறகு மெதுவாய் டிஷ்யூ பேப்பரை எடுங்கள். அதனோடு, அழுக்குகளும் சேர்ந்து வந்துவிடும். சருமத்தின் துவாரங்கள் சுருங்கி, சின்னதாகிவிடும்.

இது போல் வாரம் இரு முறை செய்தால், அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவை நீங்கி, இளமையோடு சருமம் இருக்கும்.

2 09 1465463848

Related posts

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

பெண்களே அடர்த்தியான புருவங்களைப் பெற இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க…

nathan

வெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன?

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மேக்கப்பில் உதடுகளை பெரிதாக்க முடியுமா?

nathan

கண் இமைகள் காக்க 8 வழிகள்!

nathan

எப்பொழுதும் இளமையான தோற்றத்தை தரும் எண்ணெய் சருமம்

nathan

சாதாரண காயிற்கு இப்படிபட்ட மகத்துவங்கள் எல்லாம் நிறைந்துள்ளன!…

sangika

இந்த பருவ காலத்தில் சில எளிய வீட்டு பராமரிப்பு முறை

sangika

சரும அழகை பாதுகாக்க கொத்தமல்லி பேஸ் பக்

nathan