29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
6 08 1465380810
சரும பராமரிப்பு

சருமத்தை க்ளீன் அண்ட் கிளியரா வச்சுக்க என்ன பண்ணலாம்?

தினமும் குளிப்பதால், தோலின் மேலே இருக்கும் அழுக்குகள் வெளியே வரும். ஆனால், நாள் முழுவதும் வெளியே சுற்றுவர்களுக்கு இது பொருந்தாது.

அழுக்குகள் சரும துவாரங்களின் வழியே உள்ளே சென்று அடைப்பட்டுக் கொள்ளும். இதனை குளிப்பதை தவிர்த்து, உள்ளிருந்து அழுக்களை நீக்கவும் முயற்சிக்க வேண்டும். முக்கியமாய் எண்ணெய் சருமம் மற்றும் முகப்பரு இருப்பவர்கள் கண்டிப்பாக ஸ்க்ரப் உபயோகிக்க வேண்டும்.

ஸ்கரப் செய்வதற்கு எப்போதும் இயற்கையானதையே தேர்ந்தெடுங்கள். இவை உள்ளிருந்து அழுக்குகளை வெளியேற்றி, இறந்த செல்களை அகற்றி, சருமத்தை சுவாசிக்க செய்கிறது. இதனால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, சுருக்கங்கள் வராது. சருமம் பளிச்சென்று இருக்கும்.

இனி இறந்த செல்களை அகற்றும் வழிகளை காண்போம் : ஓட்ஸ் மற்றும் யோகார்ட் : ஓட்ஸ் மற்றும் யோகார்ட் சம அளவு எடுத்து, அதில் 1 ஸ்பூன் தேனை கலந்து முகத்தில் நன்றாக தடவுங்கள். மூக்கின் ஓரங்களில் பெரும்பாலும் இறந்த செல்கள் அதிகமாய் காணப்படும். அது போன்ற பகுதிகளில், லேசாக அழுத்தம் கொடுத்து தேயுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவலாம்.

சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய் : ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சர்க்கரையை சிறிது ஆலிவ் எண்ணெயுடன் கலக்குங்கள். இவற்றுடன் சில துளி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் மிருதுவாய் பளபளக்கும்.

க்ரீன் டீ மற்றும் சமையல் சோடா: க்ரீன் டீத் தூள் 1 ஸ்பூன் எடுத்து அதே அளவு தேன் சேருங்கள். இவற்றுடன் சமையல் சோடா அரை ஸ்பூன் கலந்து இந்த கலவையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமம் சுத்தமாக இருக்கும்.

காபிப் பொடி: காபிப் பொடி சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி, மிருதுவாக்கும். காபிப்பொடியுடன் சிறிது பாதாம்எண்ணெய் கலந்து , முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு தோல் : ஆரஞ்சு தோல் அருமையான ஸ்கரப். இது சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கும். முகப்பருக்களை தடுக்கும். அதிகப்படியான எண்ணெயை குறைக்கும். ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்துகொள்ளுங்கள்.

ஆரஞ்சுபொடி 1 ஸ்பூன் எடுத்து அதில் யோகர்ட் கலந்து முகத்தில் போடுங்கள். 15- 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் வாரம் 2 அல்லது 3 முறை செய்யலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் வாரம் ஒரு முறை செய்தால் போதுமானது.

கடலை மாவு : கடலை மாவு சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை குறைக்கும். கடலைமாவுடன் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து, முகத்தில் பேக்காக போடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து நன்றாக தேய்த்து கழுவினால், சருமம் இளமையாகவும், அழுக்கின்றியும் இருக்கும்.

அவகாடோ விதை : அவகாடோ சதைபகுதியை அழகிற்கு உபயோகப்படுத்தியிருப்போம். அதன் விதையும் நல்ல ஸ்க்ரப்பாக நம் சருமத்திற்கு பயன்படுகிறது. அவகாடோ விதையை சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளுங்கள்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு, பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை 1 ஸ்பூன் எடுத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். ஒருமுறை செய்ததுமே பலனை காண்பீர்கள். சருமம் மிருதுவாக மினுமினுக்கும்.

6 08 1465380810

Related posts

கைகள் மற்றும் கால்களின் அழகை மேம்படுத்த சூப்பர் டிப்ஸ்…..

nathan

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்.—-அழகு குறிப்புகள்

nathan

அரோமா தெரபி

nathan

மார்பகங்களுக்கு அடியில் கருமையாக உள்ளதா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

nathan

Tips.. இதை செய்தால் சருமம் பொலிவுபெறும்..!!

nathan

விளக்கெண்ணெயின் அழகு நன்மைகள்!!!

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்,beauty tips on tamil

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வறட்சியான சருமத்திற்கு 10 கன கச்சிதமான டிப்ஸ்!!

nathan

டாட்டூ மோகம் ஓர் எச்சரிக்கை பதிவு

nathan