26.3 C
Chennai
Monday, Aug 11, 2025
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:

ld821புருவம் இலேசாக மேலேற வெளிப்புறம் கொஞ்சமாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்புறமாக இருக்கும் தேவையற்ற முடியை அகற்றி விடுங்கள். முடியுமிடத்தில் மிகவும் மெலிதாக இருக்கட்டும்.

* சதுர முகம்: புருவ வளைவு அகன்று இருக்க வேண்டும். புருவ முடிகளின் வரிசையில் உள்பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற்ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.

* வட்ட முகம்: புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்துக் குறுகிக் கொண்டே இருக்க வேண்டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள்.

* நீளமான முகம்: எவ்வளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத்தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.

* புருவம் தீட்டப் பொதுவாக ஐப்ரோ பென்சில்களைப் பயன்படுத்துவதே நல்லது. விரல் நுனியில் மை தொட்டு இழுக்கும் பழக்கத்தைத் தவிர்த்துவிடவும். ஐப்ரோ பென்சிலை எவ்வளவு மெல்லியதாக முடியுமோ அவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்தவும்.

* உட்புறமிருந்து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் ‘செயற்கை’ என்று காட்டிக் கொடுத்துவிடும்.

* பிரஷ் செய்யத் தொடங்கும்போது முதலில் வெளிப்புறமிருந்து உட்புறமாகப் பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக்கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன்றவை நீங்கும்.

* பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிருந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்.

இனி உங்கள் புருவத்தினை அழகா வச்சிக்க முயற்சி பண்ணி பாருங்க, உங்கள் முகமும் அழகா இருக்கும்.

Related posts

முகப்பரு தழும்பு மாற!

nathan

கைகளை பராமரிக்க சில டிப்ஸ் கள் இதோ…

sangika

எண்ணெய் வழியும் சருமமா?

nathan

இதோ சில இயற்கை வழிகள்! குதிகால் வெடிப்பை போக்க…

nathan

நடிகர் யோகி பாபு பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..?

nathan

பெண்களே உங்கள் கைகளே சொல்லும் நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று ?படிங்க!

nathan

கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்!….

sangika

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை செய்து வந்தால் முகம் பொலிவடையும்.

nathan

ஒளிரும் சருமத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக்

nathan