25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201609121418304655 chettinad mutton kola urundai SECVPF
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை
தேவையான பொருட்கள் :

மட்டன் கைமா – 750 கிராம்
பெரிய வெங்காயம் – 1
துருவிய தேங்காய் – 3/4 கப்
முட்டை – 1
பச்சை மிளகாய் – 7
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பற்கள்
மஞ்சள் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, முட்டை, தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

* பிசைந்து வைத்த மசாலாவை உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை ரெடி!!!201609121418304655 chettinad mutton kola urundai SECVPF

Related posts

செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

nathan

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்

nathan

சளி தொல்லைக்கு இதமான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு

nathan

செட்டிநாடு மசாலா சீயம்

nathan

செட்டிநாடு இறால் சுக்கா

nathan

செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு -செய்முறை

nathan

செட்டிநாடு மட்டன் குருமா செய்முறை விளக்கம்

nathan

செட்டிநாடு மீன் பிரியாணி,tamil samayal tips

nathan

செட்டிநாடு மட்டன் குழம்பு விரிவான செய்முறை

nathan