நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியது. நாள் முழுவதும் கடும் வேலை செய்பவர்கள் இரவு சாப்பாட்டில் மருந்து பொருட்கள் என இதை அரைத்து குழம்பு டன் கலந்து சாப்பிடுவது இன்றும் வழக்கில் உள்ளது. மலைகளிலும் நிலத்திலும் பயிரிடப்படும் குறுஞ்செடி. பூக்களில் தோன்றும். விதைகள் பழுத்ததும் தனியாகப் பிரிக்கப்படும். சோயிக் கீரை எனப்படும் இதன் இலைகள் இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். உணவுக்கு ஏற்றது கீரைக்கடைகளில் கிடைக்கும். கீழ் வாய்கடுப்பு, வலி நோய், தலை வலி, காது வலி, மூக்கில் நீர் பாய்தல், வாதம், முதலியவற்றை போக்கும் மருத்துவக் குணம் உடையது. நல்ல பசியை ஏற்படுத்தும். ஈரல், நுரையீரல், இரைப்பை இவைகளிலுள்ள சிக்கலை நீக்கி உடலுக்கு நன்மை தரும். அளவுக்கு அதிகமானால் விக்கல், வாந்தி, ஒக்காளம் தலை சுற்றல் ஆகியவற்றை உண்டாக்கும்.
சில பெண்களுக்கு மாதவிடாய் தோன்றும் காலங்களில் ரத்தபோக்கு அதிகமாக இருக்கும். இவர்கள் சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி சம அளவு பனைவெல்லம் சேர்த்து அரைத்து 5 கிராம் காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து சோம்புக் குடிநீர் குடித்து வர மாதவிடாய் கோளாறு, அதிகமான ரத்தபோக்கு நீங்கி கருப்பை பலப்படும். குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு சத குப்பை இலையைக் கைப்பிடியளவு அரைத்து எடுத்து 500 மி.லி விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி 5 சொட்டு வீதம் 3 வேளை கொடுத்தால் தீரும். வலிப்பு நோய்களில் மிக கொடுமையானது காக்கை வலிப்பு. எத்தனை வலிமையுள்ளவர்களாக இருந்தாலும், உடல் வனப்புடன் விளங்கினாலும், இந்த காக்கை வலிப்பு ஏற்பட்டால் அவர்கள் படும் மனத்துன்பம், உடல் துன்பம் அளவி ட முடியாது.
இவர்கள் சதகுப்பை இலையைக் கைப்பிடியளவு அரைத்து எடுத்து 500 மி.லி விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி மூன்று வேளையும் 5 சொட்டு வீதம் தொடர்ந்து 12 நாட்கள் கொடுத்து வர வேண்டும். அடுத்த 12 நாட்கள் கொடுக்க கூடாது. அதன் பிறகு மீண்டும் 123 நாட்கள் கொடுக்க வேண்டும். நோயின் வீரியத்தை பொறுத்து கொடுக்கும் காலத்தை முடிவு செய்ய வேண்டும். உடல் அதிகளவில் சூடாகிவிட்டதாக தெரிந்தால் ,நிறுத்தி விட வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் கொடுக்க வேண்டும். கொடுமையிலும் கொடுமையான வேதனை தரக் கூடியது, கீழ் வாய் கடுப்பு என்னும் ஆசன வாய் கடுப்பு. இவர்கள் எவ்வளவு நல்ல குணம் கொண்டவர்களாக இருந்தாலும், இதன் வேதனை காரணமாக எரிந்து எரிந்து விழுவார்கள் இவர்கள் சதகுப்பை இலையை
நிழலில் உலர்த்திப் பொடி செய்து 15 கிராம் எடுத்து சிறிது சர்க்கரையுடன் கலந்து 3 வேளை சாப்பிட்டு கீழ் வாய்க்கடுப்பு முற்றிலும் தீரும்.
மேலும் தலை நோய், காது வலி, பசி மந்தம், , மூக்கு நீர்ப்பாய்தல் உள்ளவர்கள் இதே முறையில் எடுத்துக் கொண்டால் அவை குணமாகும். கைக்குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று தொல்லை ஏற்படும். பால் ஜீரணமாகாமல் வாந்தி எடுக்கும். இதனால் குழந்தை அவ்வப்போது அழுது கொண்டே இருக்கும். இதற்கு அரை தேக்கரண்டி சத குப்பை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை இளம் வறுப்பாக வறுத்து 100 மி.லி. தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து இளம்சூட்டில் ஊட்ட வேண்டும். இதை நாள்தோறும் இருமுறை புதிதாக தயார் செய்து புகட்ட வேண்டும். ஒரு மாத குழந்தைக்கு ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம். மாதம் ஆக ஆக அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இது எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.
சத குப்பை இலையை மைய அரைத்து 15 கிராம் எடுத்து ஒரு 200மிலி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளையாகக் குடித்து வர பசி மந்தம், மூக்கு நீர்ப்பாய்தல் குணமாகும். மாதவிடாய் சுழற்சி சரியாக அமையாமல் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே சத குப்பை, எள், கருஞ் சீரகம் போன்றவற்றை சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பனை வெல்லத்துடன் கலந்து எலுமிச்சைக்காய் அளவு உருண்டை செய்து நாள்தோறும் இரு வேளை சாப்பிட மாதவிடாய் பிரச்னை தீரும். இதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராகும். அந்த கால கட்டத்தில் ஏற்படும் வலியும், சோர்வும் நீங்கும். கருப்பையும் பலமடையும்.
சத குப்பையின் விதைகளை பொடித்து 12 கிராம் முதல் 35 கிராம் வரை எடுத்து 340 மிலி தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை சுண்ணாம்பு தெளிந்த நீரில் கலந்து மூன்றாக பங்கிட்டு மூன்று வேளை கொடுக்க வயிற்று பொறுமல் நீங்கும். தாய்ப்பால் இல்லாமல் அவதிப்படும் பெண்கள் அரை தேக்கரண்டி சத குப்பை சூரணத்துடன், அரை தேக்கரண்டி அமுக்கரா சூரணம் கலந்து, சிறிது வெல்லமும் சேர்த்து சாப்பிட்டால் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும் சத குப்பைச் சூரணம் ஒரு கிராம் எடுத்து சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரப் பசியின்மையைப் போக்கும்.
உடல் வலி உண்டாக்கும் வாதநோயைக் கட்டுப்படுத்தும். இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும். சளி பிடித்து மூக்கில் நீர் பாய்ந்து சைனஸ் ஏற்பட்டால் சத குப்பை இலையைக் காயவைத்துப் பொடியாக்கி படுக்கை அறையில் வைத்துப் சாம்பிராணி புகைப்போல் புகைக்க தலை நோய், காது வலி, மூக் கில் நீர் பாய் தல் கட்டுப்படும். நலம் உண்டாகும். காய்ந்து வீணாய் கிடக்கும் ஒன்றை ஆராய்ந்த நமது முன்னோர்கள் அதன் மருத்துவ குணத்தை கண்டு வியந்தனர். வருங்கால மனித குலத்தினர் அதை பயன்படுத்தி நலமுடன் வாழ முறைகளும் சொல்லி சென்றனர். அவர்கள் வழியில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.