35.9 C
Chennai
Wednesday, Jul 16, 2025
2 06 1465213386
முகப் பராமரிப்பு

வில் போல புருவம் வேணுமா? இதை ட்ரை பண்ணுங்களேன்.!ஈஸி டிப்ஸ்

அடர்த்தியா வானவில் மாதிரி வளைஞ்சு, புருவம் இருந்த சின்ன கண்களை கூட அழகாய் காட்டும். சிலருக்கு பெரிய கண்கள் இருந்தாலும், புருவம் இல்லைனா, ஏதோ மிஸ்ஸிங் போலத் தோணும்.

இன்னும் கொஞ்சம் அடர்த்தியா புருவம் இருந்தா நல்லாயிருந்திருக்குமே என கண்ணாடி பாத்து நீங்க நிறைய பேர் புலம்பியிருப்பீங்க. இப்படி ஏதோ ஒரு வகையில் புருவம் ங்கிறது நம்ம முக அழகிற்கு ஒரு ப்ளஸ்.

புருவமே இல்லைனாலும், அதை வர வைக்கிறதுலதான் நம்ம ஆட்டிடியூட் இருக்குன்னு நினைச்சுகிட்டே இந்த டிப்ஸ் ல சொல்லியிருக்கிறதை ஃபாலோ பண்ணுங்க.

புருவம் வளரச் செய்யும் சீரம் : இதுக்கு தேவையான பொருள்கள் ரொம்ப எளிமையானதுதான். தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் விட்டமின் ஈ ஆகியவைகள் இருந்தால் போதும்.

இந்த எண்ணெயை புருவத்தில் தீட்ட, ஒரு மஸ்காரா பிரஷ் இருந்தால் இன்னும் நல்லதாக இருக்கும். இல்லையென்றாலும் வேறு ஏதாவது ஒரு பிரஷ்ஷினை உபயோகப்படுத்தலாம்.

பொதுவாக தலையில் முடி வளர்ச்சிக்கும், புருவத்தில் முடி வளர்ச்சிக்கும் வித்யாசம் உள்ளது. தலையில் ஏற்படும் பொடுகு கூட, புருவங்களின் வளர்ச்சியை பாதிக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் அருமையான வளர்ச்சியை புருவத்திற்கு அளிக்கும். விட்டமின் ஈ போஷாக்கினை கொடுத்து, புருவ வளர்ச்சியை தூண்டச் செய்கிறது.

இப்படி மூன்றுமே ஒரு கலவையாக உங்கள் புருவத்தில் செயல் புரிந்து, எப்படி புருவ வளர்ச்சியை தராமல் போகும். எப்படி செய்வது இந்த எண்ணெய் சீரத்தை என பார்க்கலாம்.

தேவையானவை : தேங்காய் எண்ணெய் – 1 டீ ஸ்பூன் விட்டமின் ஈ – அரை டீ ஸ்பூன் விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன் மஸ்காரா பிரஷ் -1

மேலே சொன்ன எண்ணெய்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலின் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மஸ்காரா பிரஷில் அந்த எண்ணெயை குழைத்து, பிரஷ்ஷினால், புருவத்தில் பூசுங்கள்.

தினமும் இரவில் பூசி வாருங்கள். இந்த எண்ணெயை இமைகளுக்கும் பூசலாம். நீங்கள்பிரஷினால் தீட்டும் அதே வாகில் முடி வளர்ந்து , புருவம் அடர்த்தியாய் காண்பிக்கும். ஒரு மாதத்தில் அழகான புருவம் கொண்ட பெண்ணாக நீங்கள் இருப்பது உறுதி.

2 06 1465213386

Related posts

கறுப்பை கொண்டாடுவோம்!

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை முற்றிலும் மறைக்கும் ஓர் ஃபேஸ் மாஸ்க்!

nathan

தழும்புகளை மறைய வைக்க ‘விட்டமின் ஈ’ உதவுமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

முகத்தை நீண்ட காலம் இளமையாக வைக்க கொய்யாப்பழத்தை இப்படி பயன்படுத்துங்க..!

nathan

2 வாரத்தில் முகத்தில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

முகத்திற்கு ப்ளீச்சிங் செய்தால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

உங்களுக்கு தெரியுமா திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன ?

nathan

முகப்பருவை மறைக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தி விடுங்க!இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan