29.6 C
Chennai
Monday, Dec 23, 2024
OsPgt0F
சிற்றுண்டி வகைகள்

பாஸ்தா சீஸ் பால்ஸ்

எவ்வளவு நேரம்?

45 நிமிடங்கள்.

எண்ணிக்கை?

13-14 பால்ஸ்.

என்னென்ன தேவை?

மக்ரோனி பாஸ்தா – 1 கப்
சீஸ் – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1
பொடியாக நறுக்கிய குடை
மிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் அல்லது பாஸ்தா சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
ஒரிகானோ (oregano) – 2 சிட்டிகை
மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு
பிரெட் க்ரெம்ப்ஸ் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

1. மக்ரோனி பாஸ்தாவை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேவையான உப்பு சேர்த்து வேக வைத்து, வடிகட்டி கொள்ளவும்.

2. தண்ணீர் நன்கு வடிய வேண்டும்.

3. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.

4. அகலமான பாத்திரத்தில், சீஸ், தக்காளி சாஸ் / பாஸ்தா சாஸ், மிளகாய் தூள் / சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, நறுக்கிய குடை மிளகாய், ஒரிகானோ, மைதா மாவு மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.

5. வெந்த பாஸ்தாவை கைகளால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

6. எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கைகளால் பிசையவும்.

7. சிறு உருண்டைகளாக உருட்டி பிரெட் க்ரெம்ப்ஸில் புரட்டி எடுக்கவும்.

8. எண்ணெயை சூடாக்கி, மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை பொன் நிறம் ஆகும் வரை வேக விட்டு பொரித்து எடுக்கவும்.

9. தீயை குறைத்து வைத்து பொரிக்கவும்.சுவையான பாஸ்தா சீஸ் பால்ஸ் தயார்.

உங்கள் கவனத்துக்கு…

* இந்தக் கலவையோடு பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் முட்டைக்கோஸ் சேர்க்கலாம்.

* பாஸ்தா வெந்தவுடன் தண்ணீரை நன்றாக வடிகட்டி விடவும்.OsPgt0F

Related posts

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்

nathan

பிரட் ஆனியன் பொடிமாஸ்

nathan

ரவை சர்க்கரைப் பொங்கல்

nathan

கான்ட்வி : செய்முறைகளுடன்…!

nathan

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan

பிட்டு

nathan

வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

nathan

ஓணம் ஸ்பெஷல்: ஓலன் செய்வது எப்படி

nathan

முட்டை பிட்சா

nathan