29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Dementia 1
மருத்துவ குறிப்பு

ஞாபகமறதி நோய் (Dementia)

மறதி என்பது வயோதிபத்தின் ஒரு இயல்பு என்பது எம்மில் பலரது கணிப்பாகும். அதனால் ஞாபக மறதியை இயல்பாகக’ கருதி பெரும்பாலானோர் உதாசீனப்படுத்தி விடுகின்றனர். ஞாபகமறதி என்பது ஒரு நோய் என்பதைச் சிலரே அறிந்து வைத்திருக்கிறார்கள்.

மேலைத்தேய நாடுகளில் பெரும்பாலானவர்கள் இப்போது இந்நோயின் தாக்கத்தை பூரணமாக அறிந்து அந்நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட உடனேயே வைத்தியரை நாடி அது பற்றிய விளக்க அறிவைப் பெற்றுக் கொள்வதுடன் தேவையான சிகிச்சையையும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

மறதி நோயும் நீரிழிவு, உயர்குருதி அமுக்கம், இதய நோய்கள் போன்றே தவிர்க்கக்கூடிய அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய ஒரு நோய்தான். ஆனால் இந்த நோய் முக்கியமாக மூளையைப் பாதிப்பதால் பலரும் இதனை ஒரு நோயாகவே உணர்வதில்லை.

மறதி நோய் (Dementia) என்பது சிதைவடையும் மனம் என்று பொருள்படும். வயது கூடும் போது இந்த நோயால் பாதிப்படையும் சாத்தியக் கூறும் படிப்படியாக அதிகரிக்கும். ஐக்கிய இராச்சியத்தில் 65 வயது முதல் 69 வயதுக்கு இடைப்பட்டோரில் இந்நோயினால் பாதிக்கப் படக்கூடியோரின் சாத்தியக்கூறு (Prevalence) 1.3 வீதம் ஆகும். இந்த விகிதாசாரம் படிப்படியாக அதிகரித்து 95 வயது உள்ளவர்களில் 32.5 வீதம் வரை செல்லும். உலகளாவிய ரீதியில் 60 வயதுக்கு மேலானவர்களில் மறதி நோயால் பாதிக்கப்படுவோரின் வீதம் 3.9 ஆகும். ஞாபக சக்தியை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. குறுகிய கால நினைவாற்றல் (Short Term Memory )
2 . நீண்டகால நினைவாற்றல் (Long Term Memory)

குறுகிய கால நினைவாற்றல்
ஞாபகமறதி நோயால் பாதிக்கப்படும் பெரும்பாலானோரில் குறுகிய கால நினைவாற்றலே முதலில் பாதிப்புக்குள்ளாகும் இவர்கள் அறிந்தவர்களின் பெயர்கள் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்,கணக்கு.வழக்குகள் என்பவற்றை மறந்து விடுவார்கள். இதனால் இவர்கள் குழப்பமடைந்தவர்களாகவும் இலகுவில் பதற்றமடை பவர்களாகவும் இருப்பார்கள். சில வேளைகளில் மனத் தளர்ச்சிக்கும் (Depression) ஆளாவார்கள்.

நீண்டகால நினைவாற்றல்

நீண்ட காலமாக நினைவாற்றலை வெளிப்படையான நினைவாற்றல் (Explicit) Memory /Declarative memory) நடைமுறை நினைவாற்றல் அல்லது உள்ளக நினைவாற்றல் (Implicit Memory / Procedural Memory) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

வெளிப்படையான நினைவாற்றல்

1. உபகதை நினைவாற்றல் (Episode Memory) – இதில் ஞாபக சக்தி சம்பவங்களையும் அதனோடு சம்பந்தப்பட்ட இடம், நேரம், உணர்ச்சி மற்றும் சூழ்நிலை அறிவு போன்றவற்றையும் தீர்மானிக்கிறது.

2. பொருள் நினைவாற்றல் (Semantic Memory) – இது கருத்து சார்ந்த அறிவு அர்த்தங்களின் ஞாபகம். பொதுவாக வாழ்க்கை முழுவதும் கற்ற விடயங்கள் பற்றிய அறிவு. உதாரணமாக நிறங்களின் பெயர்கள். எழுத்துக்களின் ஒலிகள், பொருள் அல்லது விலங்குகளின் பெயர்கள் என்பவற்றின் ஞாபகமாகும்.

நடைமுறை நினைவாற்றல்

இந்த வகை ஞாபக சக்தியானது எம்மையறியாமல் நாம் இயல்பாகச் செய்யும் அன்றாட நடவடிக்கைகளை உதா ரணமாக சைக்கிள் ஓடுதல் “கைப்பழக்கம்” போன்றவற்றை நினைவில் இருத்துதலைக் குறிக்கும்.
ஞாபக மறதி நோயின் தாக்கத்தால் இந்த நீண்ட கால நினைவாற்றலும் நாளடைவில் பாதிப்படையக் கூடும். ஆரம்பத்தில் ஞாபக மறதியால் அவதிப்படுபவர் காலக் போக்கில் படிப்படியாக மொழியாற்றல்,சிந்திக்கும் திறன், கற்கும் ஆற்றல், அவதானம் உட்பட்ட நீண்டகால ஞாபகசக்தியை இழக்க ஆரம்பிப்பார். படிப்படியாக அவரது செயற் பாட்டு நினைவாற்றலும் பாதிக்கப்படும்.

எனவே பலசரக்கு கடையில் சமான்கள் வாங்குதல்,மனத்தைப் பயன்படுத்துல், பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல் போன்ற பல நாளாந்த கடமைகள் இதனால் பாதிப்படையும். அன்றாட அடிப்படை நடவடிக்கையான உணவுண்னல், மலசல கூடத்தைப் பாவித்தல், குளித்தல்,சுகாதாரம் ஆகிய செயற்பாடுகள் கூட நாளடைவில் பாதிக்கப்படக் கூடும். அவதானம் குறைவடையும் குடும்பத்தின் புதிய உறுப்பினர்க ளையும் குழந்தைகளையும் அடையாளம் காண்பதில் நோயாளி சிரமப்படுவார். அவரது வழமையான குணநலன் மாற்றமடையக் கூடும். மிகவும் அன்பான, அமைதியான.கனிவான மனிதராக அதுவரைகாலமும் சமூகத்தில் வாழ்ந்த அவர் மிகவும் ஆவேசமான கோபக்காரனாக மாறவும் அதேவேளையில் வாழ்க்கை முழுவதும் சண்டைக் காரனாகவும் இருப்பவர் படிப்படியாக அமைதியான நபராக மாறவும் இந்நோய் இடமளிக்கும்.

மறதி நோய்க்கான காரணிகள்

மறதி நோய் என்பது உடலில் சில தற்காலிக மாற்றங்களால் அல்லது நிரந்தரமான மாற்றங்களால் ஏற்படுகின்றது.

முதலில் தற்காலிக மாற்றங்களை எடுத்துக் கொள்வோம். தற்காலிக காரணிகளால் ஏற்படும் ஞாபக மறதியானது சிகிச்சையின் பின்பு மாறக்கூடியது. எனவே சரியான மருத்துவ பரீட்சிப்பும் சிகிச்சையும் இன்றியமை யாதன. உதாரணமாக பின்வரும் தற்காலிக ஞாபக சக்திக் குறைபாட்டுக்கான காரணிகளை குறிப்பிடலாம்.

1. சித்த பிரமை (Delirium)

குறியை உடைய எவராவது பெரும்பாலும் வயோதிபப் பருவத்திலுள்ளவர்களுக்கு கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் சித்தப்பிரமை ஏற்படுவதை அவதானிக் கலாம்.

1) தோற்று நோயால் அல்லது நுண்கிருமிகளின் தாக்கத்தால்
2) எலும்பு முறிவால்
3) சத்திரசிகிச்சையின் பின்பு அல்லது கடும் உபாதையால் அவதியுறும் போது
4) மதுபானப் பாவனையால் அல்லது அப்பழக்கத்தை விடும் போது இதனை அவதானிக்கலாம்.

பாதிப் புற்றவர் நிதானமிழந்து (Confused) நேரம் இடம் மற்றும் மக்களை அறியாதவராய் மாயத்தோற்றங்களை உணர்கின்றவராய் இருப்பார். இவர்களது நோய் அறிகுறியானது நோய்க்கான காரணி சிகிச்சையளிக்கப்படுமிடத்து இலகுவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

2.மனதளர்ச்சி (Depression)

இந்நோயானது வயோதிப வயதில் பொதுவானது. இன்று இலகுவில் சிகிச்சை அளிக்கப்படக்கூடிய மன நோயும் ஞாபக மறதி நோய் போலவே குணம் காட்டும்.

3. வைரஸ் என்செப்லைட்ஸ் (Viral Encephalitis) மூளைக்காய்ச்சல் (Memintis Hiv dilaslab (syohilis) போன்ற நுண்ணுயிர் தொற்றுக்கள்.

4. மூளை வீக்கம் (Encephalopathy)
5. வலிப்பு (Epilepsy)
6. மூளைக்கட்டிகள்
7. வலிப்பு நோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட சில வகை மருந்துகளின் உபவகைகள் (side effects)
8. மூளைச்சவ்வுக்குக் கீழான இரத்தக் கசிவு (Subdural Heamarage)
9. இயல்பு அழுத்த மூளையில் நீர் சேரல் (Normal Preasure Hydrocephalus)

– தொடரும்
Dementia 1
வைத்திய கலாநிதி ஸ்ரீ.நகுலேஸ்வரன்
முதியோர் மனநல விசேட வைத்திய நிபுணர்,
ஐக்கிய இராச்சியம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… பல் சொத்தை ஏற்படாமல் தடுக்க எளிய வழிகள்

nathan

வறண்ட சருமத்தை போக்கும் மருத்துவம்

nathan

உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்!

nathan

தினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!

nathan

விபத்தை உருவாக்கும் ‘வேகத்தடைகள்’

nathan

உங்களுக்கு தெரியுமா அம்மைத் தழும்புகளை போக்கும் ஓமவல்லி!

nathan

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?

nathan

உங்க மார்பகங்களை பெரிதாக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

தொடர்ந்து விக்கல் வந்தால் அதனை தடுத்து நிறுத்துவது எப்படி?

nathan