25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 31 1464690009
தலைமுடி சிகிச்சை

வேப்பிலை கூந்தலுக்கு செய்யும் அற்புதத்தை அறிவீர்களா?

வேப்பிலையின் வரலாறு மிகப் பழமையானது. ஆயுர்வேதத்திலும், அழகுக் குறிப்பிலும் இது மிக அருமையான பலன்களைத் தருகிறது.

ஆன்மீகத்திலும் வேப்பிலை ஆட்சி செய்கிறது. வேப்பிலையின் குணம் கசப்புதான். ஆனால் பலன் அற்புதங்கள்.அப்படிப்பட்ட வேப்பிலையை கூந்தலில் பொடுகிற்கென எவ்வாறு பயன்படுத்தலாம் என காண்போமா?

பொடுகினால் உண்டாகும் அரிப்பிற்கு வேப்பிலை நீர் : வேப்பிலை நீர் செய்வது எளிது. முதல் நாள் இரவில், ஒரு லிட்டர் நீரினை நன்றாக கொதிக்க வைத்து இறக்குங்கள். அதில் சுமார் 40 வேப்பிலைகளை போட்டு, மூடி வைத்து விடுங்கள்.

இரவு முழுவதும் விட்டுவிட்டு, மறுநாள் அந்த நீரினைக் கொண்டு தலையை அலசுங்கள். பொடுகினால் ஏற்படும் அரிப்பு, வறட்சி ஆகியவற்றை போக்கிவிடும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால், பொடுகு முழுவதும் போய்விடும்.

வேப்பிலை ஒரு கிருமி நாசினி என்பதால், தொற்றுக்களால் உண்டாகும் பிரச்சனைகளையும் போக்கி விடும்.

வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் தெரபி : உங்களுக்கு மிருதுவான, மிளிரும் கூந்தலின் மேல் ஆசை இருக்கிறதா? அப்படியென்றால் இதை முயற்சி செய்து பாருங்கள்.

வேப்பிலை -20 தேங்காய் எண்ணெய் – 2 கப் விளக்கெண்ணெய் – கால் கப் எலுமிச்சை சாறி – 1 ஸ்பூன்.

தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் அடுப்பில் வையுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் வேப்பிலையை போடுங்கள். வேப்பிலையின் நிறம் சிவந்ததும் ஒரு ஐந்து நிமிடங்கள் பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

ஆறியவுடன் வடிகட்டி, அதனுடன், எலுமிச்சை சாறு, விளக்கெண்ணெய் சேர்க்கவும். இதனை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாரம் இருமுறை இந்த எண்ணெயை தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கூந்தலை ஷாம்பு போட்டு அலசவும். மிருதுவான, போஷாக்கான கூந்தல் கிடைக்கும்.

வேப்பிலை யோகார்ட் மாஸ்க் : தேவையானவை : வெந்தயம் -2 டீ ஸ்பூன் வேப்பிலை – 40 யோகார்ட் – அரை கப் எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன்

வெந்தயம் முடி வளர்ச்சியை தூண்டும். வேப்பிலை பொடுகினை கட்டுப்படுத்தும். யோகார்ட் முடியில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வையுங்கள். பின் ஊறிய வெந்தயத்துடன், வேப்பிலையையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் யோகார்ட் கலந்து, தலையில் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை தடவுங்கள். ஒரு மணி நேரம் கழித்து, தலையை அலசவும்.

2 31 1464690009

Related posts

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan

தேகத்தில் வளரும் கேசத்தை பற்றிய சில வினோதமான தகவல்கள்!!!

nathan

இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…அதுவும் இயற்கையான முறையில்..முடி சரசரனு வேகமா வளர..

nathan

உங்கள் கூந்தலுக்கு இரட்டிப்பு ஆயுள் தர இதெயல்லாம் யூஸ் பண்ணி பாருங்க!! பலன்கள் அபாரம்!!

nathan

வெள்ளை முடியால் தொல்லையா? இவற்றை பயன்படுத்தினாலே போதும்!

nathan

முடி உதிர்வதை தடுக்கும் எலுமிச்சை

nathan

25 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் முடி உதிர்கிறது தெரியுமா?

nathan

தலைக்கு நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!

nathan

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையாக இருக்கா..? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan