22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
201609021202083808 ladys finger poriyal SECVPF
சைவம்

சுவையான சத்தான வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. வெண்டைக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான வெண்டைக்காய் பொரியல்
தேவையான பெருட்கள் :

வெண்டைக்காய் – 200
வெங்காயம் – 1
மிளக்காய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 1 டேபிள் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் டீஸ்பூன்

செய்முறை :

* முதலில் வெண்டைக்காயை கழுவி தண்ணீர் காயும் வரை வைத்து நறுக்கிகொள்ளவும். அதனை ஒரு கடாயில் போட்டு (எண்ணெய் ஊற்றக்கூடாது) லேசான தீயில் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

* பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிய கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்தபின் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி மூடி வைக்கவும்.

* பின் திறந்து பிரட்டி விட்டு அடிபிடிக்காமல் வதக்கவும்.

* கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

* வெண்டைக்காய் பொரியல் ரெடி.

குறிப்பு : வெண்டைக்காய் பொரியலை சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 201609021202083808 ladys finger poriyal SECVPF

Related posts

முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு செய்ய…!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை அரிசி புலாவ்

nathan

பனீர் 65 | Paneer 65

nathan

காலிஃப்ளவர் – பட்டாணி குழம்பு

nathan

பூசணிக்காய் பால் கூட்டு

nathan

கொத்தமல்லி புலாவ்

nathan

பட்டாணி பன்னீர் கிரேவி

nathan

தயிர் சாதம்

nathan

சூப்பரான சேமியா வெஜிடபிள் பிரியாணி

nathan