28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
Curry Leaves Rice jpg 1075
சைவம்

கறிவேப்பிலை சாதம்

தேவையானப் பொருட்கள்:

அரிசி – 2 கப்
கறிவேப்பிலை – 1 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகாய் அகியவற்றை சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகு சேர்த்து, சிறிது வறுத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் துருவலைச் சேர்த்து சிறிது வதக்கி, இறக்கி வைக்கவும். ஆறியபின், மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய்யை விட்டு, கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவிப் போடவும். பின் சாதத்தைப் போட்டு லேசாகக் கிளறவும். கறிவேப்பிலைப்பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.Curry%20Leaves%20Rice jpg 1075

Related posts

மிளகு மோர்க்குழம்பு

nathan

காளன்

nathan

காலிஃபிளவர் கேரட் புலாவ்

nathan

பீட்ரூட் சாதம்

nathan

உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

nathan

வெஜ் குருமா

nathan

பாசிப்பருப்பு வெங்காய தோசை

nathan

கேரள கடலை கறி செய்வது எப்படி

nathan

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan