காபிக்கு அடிமையாகாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நறுமணத்திலும், ருசியிலும் நம் மனதை மயக்கும் காபிக் கொட்டைகள், அழகிலும் மயக்க வைக்கும் மந்திரங்களை கொண்டுள்ளது என அறிவீர்களா?
காபிக் கொட்டைகள் உடலுக்கு புத்துணர்வு தருவதை போலவே, சருமத்திற்கும் புத்துணர்வு அளிக்கிறது. அவை சரும அழகிற்கும்,கூந்தல் வளர்ச்சிக்கும் உபயோகப்படுத்தலாம்.
சருமத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றுகிறது. இறந்த செல்களை அகற்றுகிறது. தலைக்கு கண்டிஷனராக பயன்படுகிறது. போதாதா நம் மனதிற்கு இன்னும் நெருக்கமாகிவிட. இப்போது அவற்றின் பலன்களை பார்க்கலாம்.
நல்ல தரமான காபிக் கொட்டைகளை வாங்கி பொடித்துக் கொள்ளுங்கள். அவற்றை பல்வேறு அழகுக்கு உபயோகப்படுத்தலாம்.
காபிக் கொட்டை ஸ்க்ரப் : அரைத்த காபிப் பொடியில் சிறிது ஆலிவ் எண்ணெயும் , நீரும் கலந்து, முகத்தில் ஸ்க்ரப் போலத் தேயுங்கள். அழுக்களை நீக்கி, சருமத்தை இறுக்கும். முகத்தில் மாசு மரு இல்லாமல், பளிச் என்று இருக்கும்.
கூந்தலுக்கு நிறம் தரும் : உங்களுக்கு பிரவுன் நிற கூந்தல் தேவையென்றால், இந்த குறிப்பினை தேர்ந்தெடுங்கள். காபிப் பொடியில் டிகாஷன் தயார் செய்யவும். நீரில் காபிப் பொடியை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
சில நிமிடங்களில் ,அடுப்பை அணைத்து வடிகட்டி டிகாஷன் தயர் செய்து கொள்ளுங்கள். இதனை தலையில் கூந்தல் முழுவதும் தடவி, இதமாக மசாஜ் செய்யுங்கள்.
அரை மணி நேரம் கழித்து, கூந்தலை அலசுங்கள். இது கூந்தலுக்கு அடர் பிரவுன் நிறத்தினை தரும். கந்தலை மிருதுவாக்கும். கூந்தலுக்கு பளபளப்பை தரும்.
தளர்வான சருமத்திற்கு பலன் தரும் : உங்கள் முகம் 30 வயதுகளில் தொய்வடைய ஆரம்பிக்கும். அப்படியே விட்டால், வயதான தோற்றம் வந்துவிடும். இந்த பிரச்சனைக்கும் காபிக் கொட்டை நல்ல பலனைத் தருகிறது.
காபிப் பொடியில், சிறிது நீர் கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். நன்றாக காய்ந்ததும், முகம் கழுவி விடுங்கள். இது, சருமத்தை இறுகச் செய்யும்.
பாதங்கள் மிருதுவாக : காபிக் கொட்டை எத்தகைய இறந்த செல்கள் இருந்தாலும் எளிதில் அகற்றி விடும். வெதுவெதுப்பான நீரில் காலை அமிழ்த்தி 10 நிமிடங்கள் வையுங்கள்.
பிறகு காபிப் பொடியுடன், சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து பாதத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். அதன் பிறக்கும் அதில் சிறித்து நீர் ஊற்றி பாதம் முழுக்க தேய்த்தால், இறந்த செல்கள் அகன்று, அழுக்குகள் நீங்கி, பாதம் மிருதுவாகும்.
காபிக் கொட்டை ஃபேஸ்பேக் : காபிப் பொடியுடன் சிரிது யோகார்ட், தேன், கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், உங்கள் சருமம் மிளிரும் என்பது உண்மை. சுருக்கங்கள் மறைந்து, மிருதுவாகிவிடும்.
நீங்களும் முயற்சி செய்து, அதன் ருசியை போலவே அது தரும் அழகினையும் ரசியுங்கள்.