29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
vsa
தொப்பை குறைய

வயிற்று பகுதி சதையை குறைக்க உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி

தொப்பை குறைய எளிய பயிற்சி
இப்போது உள்ள காலகட்டத்தில் அனைவரையும் கவலை அடைய செய்யும் பெரிய பிரச்சனை எது என்றால் அது தொப்பை. உடல் உழைப்பு இல்லாத இந்த அவசர யுகத்தில் 10ல் 8 பேர் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். இந்த தொப்பையை குறைக்க ஜிம்மில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் சற்று கடினமாக இருக்கும்.
ஆனால் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான பயிற்சி ஒன்று உள்ளது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் தரையில் கால்களை நேராக நீட்டி, கைகளை உடலோடு ஒட்டி வைத்து மல்லாந்து படுக்க வேண்டும். உள்ளங்கைகள் தரையில் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். இந்த நிலையில் இரண்டு கால் முட்டிகளையும் மடக்கி இடுப்பு வரை தூக்க வேண்டும்.
இது தான் ஆரம்ப நிலை. இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் அடுத்த நிலைக்கு வர வேண்டும். கால் முட்டியை மடக்கிய படி, கைகளை நன்றாக தரையில் ஊன்றி இடுப்பிற்கு மேல் தூக்க வேண்டும். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 20 முறை செய்யலாம். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.vsa

Related posts

தொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்… 5 பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்!

nathan

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்.

nathan

கொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்?

nathan

இந்த டீயை தினமும் 3 கப் குடிச்சா.. இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்!

nathan

எடையை குறைக்கும் உடற் பயிற்சிகள்

nathan

தொப்பையை குறைக்க உதவும் ஒரு முக்கிய பொருள் கொள்ளு!

nathan

தொப்பை ரொம்ப அசிங்கமா தொங்குதா? இந்த 7 ஜூஸ் குடிங்க!!!

nathan

இதயத் துடிப்பை சீராக்கும் புஷ் அப் வித் ரொட்டேஷன் பயிற்சி

nathan