27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
201608201421167981 how to make Vegetable cheese bread rolls SECVPF
சிற்றுண்டி வகைகள்

பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி

குழந்தைகளுக்கு விருப்பமான பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பிரெட் – 10
கேரட் – ஒன்று
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 1
கடுகு – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
துருவிய சீஸ் – தேவைக்கு

செய்முறை :

* வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் தண்ணீர் ஊற்றி கேரட், உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும். வெந்ததும் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

* அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, கேரட் கலவையை சேர்த்து பிரட்டவும்.

* கலவை ஒன்று சேர்ந்ததும் ஆறவைத்து கொழுக்கட்டைகள் போல் உருட்டிக் கொள்ளவும்.

* பிரெட்டின் ஓரங்களை நீக்கி விடவும். கையை தண்ணீரில் நனைத்து பிரெட்டின் இரு புறங்களிலும் வைத்து அழுத்தவும்.

* பிரெட்டின் மேல் சீஸை தூவி விடவும். பிரெட்டின் ஒரு ஓரத்தில் மசாலா கலவையை வைத்து அப்படியே சுருட்டவும், பின்னர் இரண்டு ஓரங்களையும் தண்ணீர் தொட்டு கொண்டு மூடி விடவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் பிரெட் ரோலை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான மொறுமொறு பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் ரெடி.201608201421167981 how to make Vegetable cheese bread rolls SECVPF

Related posts

கம்பு தயிர் வடை

nathan

வீட்டிலேயே பீட்சா…!

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்

nathan

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல் -தெரிஞ்சிக்கங்க…

nathan

பொங்கல் ஸ்பெஷல்: சர்க்கரை பொங்கல்

nathan

குழந்தைகளுக்கு சத்தான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

nathan

பிரெட் வெஜிடபிள் புலாவ்

nathan

சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்

nathan

கிரானோலா

nathan