யாருக்குதான் இளமையாக இருக்க பிடிக்காது? குறிப்பாக பெண்களுக்கு. ஆனால் வயதாவதை யாராலும் தடுக்க முடியாதுதான். ஆனால் வயதான தோற்றத்தை தள்ளிப் போட முடியும். உங்களாமல் மனது வைத்தால் முடியும்.
இளமையாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முப்பதின் ஆரம்பித்திலேயே பின்பற்றினால், நிச்சயம் 50 களிலும் 30 போல் இருப்பீர்கள். இயற்கையான அழகு சாதனங்கள், வேளைக்கு சத்துள்ள ஆகாரம், கொஞ்சம் உடற்பயிற்சி, போது. இனி என்ன வேண்டும்.
ஆயுர்வேதத்தில் இயற்கையாய் இளமையாய் இருப்பதற்கான எல்லா வழிமுறைகளும் உள்ளன. அவை என்னென்னெ காண்போம்.
அதிகாலையில் எழுவது :
சூரியன் வருவதற்கு 45 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். அதிகாலையில் சீக்கிரம் எழுந்தால் இளமையாக இருக்கலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அப்போது உடலுக்குள் நேர்மறை சக்தி அதிகமாய் உடலுக்குள் பாய்வதாக சொல்கிறார்கள். ஆகவே சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுவதற்கு கற்றுக் கொள்ளுங்கள்.
யோகா மற்றும் உடற்பயிற்சி :
யோகா உங்கள் உடலுக்குள் இருக்கும் சக்கரங்களை தூண்டச் செய்கிறது. சக்கரங்கள் நமது ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்கின்றன. ஹார்மோன்கள் சரி வர இயங்கினால், முதுமையான தோற்றத்தை தள்ளிப் போடும் என்கின்றனர்.
ரசாயனா தெரபி :
ஆயுர்வேதத்தில் செய்யப்படும் ரசாயனா தெரபி, நீண்ட ஆயுளுடன் ஆரோகியமாக, இளமையாக இருக்க உதவுகிறது. இது திரிபலா,அமலக்கி, ஹரிடக்கி, என அரோமா மற்றும் மூலிகை எண்ணெய் கொண்டு உடலுக்கு செய்ய்யப்படும் மசாஜ் ஆகும். நாடி நரம்புகளை தூண்டச் செய்கிறது. சருமத்திற்கு பொலிவினை உண்டாக்கும். இந்த தெரபியை நீங்கள் தவறாமல் எடுத்துக் கொள்ளலாம்.
நீர் தெரபி :
நீர் தெரபி என்பது வேறொன்றும் இல்லை. மழை நீரினை பிடித்து குடிப்பது, உடலுக்குள் இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்கும். இளமையாய் வைத்திருக்கும்.
அதே போல், செம்பு பாத்திரங்களில் நீர் பிடித்து, 8 மணி நேரம் கழித்து அதிலிருந்து நீர் குடித்தால் போதிய ஆன்டி ஆக்ஸிடென்ட் கிடைக்கும். உடல் கழிவுகளை வெளியேற்றி, உடலை மினுமினுப்பாக வைத்திருக்கும். இளமையை எப்போதும் காக்கலாம்.
நாசியா தெரபி :
ஆயுர்வேதத்தில் மூக்கில் விடும் சொட்டு மருந்திற்குதான் நாசிய தெரபி என்று பெயர். அதனை தினமும் 2- 3 தடவை மூக்கில் சில சொட்டுக்கள் இட்டுக் கொண்டால், முதுமையான தோற்றம் தடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல், நரை முடி, சோர்வு, சுருக்கங்கள் ஆகியவை நெருங்காது என்று கூறுகின்றனர்.
தியானம் :
தியானம் செய்தால், பொலிவான இளமையான சருமம் பெறலாம் என்ரு ஆயுர்வேதத்தில் கூறுகின்றனர். தியானம் செய்யும்போது, நிறைய ஆக்ஸிஜன் உடலுக்குள் அனுப்பப்படுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி, உடலின் எல்லா இடங்களுக்கும் தேவையான அளவு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு, நம்மை சுறுசுறுபாகவும் இளமையாகவும் வைத்திருக்கும்.
உணவு :
நீங்கள் முப்பதுகளில் இருந்தால் இப்போது குடை மிளகாய், கேரட், பசலைக் கீரை, முள்ளங்கி, ஆகியவை அதிகம் உண்ண வேண்டும். அவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து சுருக்கங்களை தடுக்கிறதாம்.
நீர் குடித்தல் :
எந்த நோயும் நம்மை அண்ட விடாமல் இருக்க, நம் உடலிலுள்ள நீர்ச்சத்தும் உதவி புரிகிறது. உடலின் எல்லா உறுப்புகளும் வளர்சிதை மாற்றங்களும் நடக்க நீர் அதி முக்கியமானதாகும். அன்றாடம் நாம் நிறைய நீர் குடிப்பதை பழகிக்க வேண்டும்.