27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl4502
அசைவ வகைகள்

பாத்தோடு கறி

வெயில் காலத்தில் காய்கறிகள் கிடைப்பது கஷ்டமானதால் வடாம், கடலை மாவு, தயிர், பருப்பு, அப்பளம்… இவற்றைக் கொண்டு குழம்பு வகைகள் செய்வார்கள்.

என்னென்ன தேவை?

கடலைமாவு – 1 கப்,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
லவங்கம் – 4,
கறுப்பு ஏலக்காய் – 1,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தயிர் – 1/2 கப்,
பட்டை – 1 துண்டு,
மிளகு – 4-5,
மல்லித்தழை – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் உப்பு, மிளகாய்த் தூள், கடலை மாவு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து இந்த கலவையை ஊற்றி கிளறி வேக விடவும். இது திரண்டு, வெந்ததும் இறக்கி ஒரு எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். ஆறியதும் 1 இஞ்ச் சதுர துண்டு போடவும்.

மற்றொரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் தூள்கள், உப்பு, தனியாத்தூள், மீதி உள்ள மிளகாய், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து கைவிடாமல் எண்ணெய் பிரியும் வரை வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் கொதித்ததும், கடலை மாவு துண்டுகளை போடவும். சுருண்டு கிரேவியாக வந்ததும் மல்லி தூவி இறக்கவும்.sl4502

Related posts

செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: ஸ்பைசி சிக்கன் ஆப்கானி

nathan

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா

nathan

மகாராஷ்டிரா ஸ்டைல் மல்வானி இறால் குழம்பு!!

nathan

சிக்கன் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்…!

nathan

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

nathan

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

nathan

சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

Prawn Briyani / இறால் பிரியாணி

nathan