29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201608151159462004 ganesha mudra controlling Asthma blood pressure SECVPF
உடல் பயிற்சி

ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் கணேச முத்திரை

ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றது கணேச முத்திரை. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் கணேச முத்திரை
ஒவ்வொருவர் தேகத்திலும் 6 ஆதார சக்கரங்களும் ஏழாவதாய் சகஸ்ராரமும் உள்ளது. இது தியானத்திற்கு ஏழு படிகள் என்று கூறப்படுகிறது. தியானத்தின் மூலம் சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி, தொடர்ந்து ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்று கடந்து கொண்டு செல்லப்படுகிறது.

இதில் நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது இம்முத்திரை. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மேலும் மூச்சினை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்யும் வல்லமை வாய்ந்தது. ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும்.

செய்முறை :

இடது கைவிரல்களை மடக்கி கைபாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும். வலதுகை விரல்களை மடக்கி இடதுகை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது கை புஜங்களில் அழுத்தம் கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும். கை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்யவும். 201608151159462004 ganesha mudra controlling Asthma blood pressure SECVPF

Related posts

உடல் முழுவதற்கும் சக்தி கிடைக்கும் ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சி

nathan

சிரமப்படும் அம்மணிகளுக்கு சில சிம்பிள் உடற்பயிற்சிகள்

nathan

மூச்சுப் பயிற்சிகள்

nathan

சரியான முறையில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்

nathan

ஃபிட்டான தொடைக்கு எளிய 3 பயிற்சிகள்

nathan

இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்யவேண்டாம்

nathan

உயர் ரத்த அழுத்தம், இருதய பக்க கோளாறுகள், தூக்கமின்மைக்கு பயனுள்ள பயிற்சி யோக நித்திரை

sangika

தொடையின் பக்கவாட்டு தசையை வலுப்படுத்தும் பயிற்சி

nathan

முதுகு வலியை குணமாக்கும் வக்ராசனம்

nathan