ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. உணவு பழக்கம், கடவுள் நம்பிக்கை, அழகு என நாட்டுக்கு நாடு வித்யாசப்படும்.
அப்படி பெண்களுக்கு மிக பிடித்த அழகைப் பற்றி பேசுகையில், எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு விதமான அழகுக் குறிப்புகளை மேற்கொள்வார்கள். அதனை தெரிந்துகொள்ள எல்லாருமே விருப்பப்படுகிறோம்.
கொழுக் மொழுக்கென குண்டான மொழு மொழு சருமத்துடன் இருக்கும் யாரை பார்த்தாலும் “சைனிஸ் டால்” என வர்ணிக்கிறோம். சைனாவில் இருக்கும் பெண்களின் சருமம் இயற்கையாகவே மிக மிருதுவான, கண்ணாடி போன்ற சருமம்.
அவர்களின் சருமம் வயதான பின்னும் இளமையாக இருக்கும். ஆனால் அவர்களுக்கும் சருமப் பிரச்சனைகள் வரத்தானே செய்யும். ஆனால் அவர்கள் என்ன செய்வார்கள். எந்த மாதிரியான அழகுக் குறிப்புகளை பயன்படுத்துகிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வமாய் இருக்கீங்களா? அப்போ படிப்பதை தொடருங்க.
அரிசி நீர் :
சீன பெண்கள் அரிசியை 2 கப் நீரில் ஊற வைத்து, வடிகட்டி, அந்த நீரினால் முகத்தை கழுவுவார்கள். இதனால் முகத்தில் சருமம் இறுக்கமடையும். கன்னங்கள் பூசியது போல காணப்படும். இது சருமத்திற்கு பளபளப்பையும் தரும்.
பச்சைப் பயிறு:
சீனப் பெண்கள் பச்சைப்பயிறு பேஸ்ட் செய்து பூசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பச்சைப் பயிறை பொடி செய்து அதனை மாஸ்க் போல முகத்தில் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சிப்பி :
சிப்பி பொடி சீனாவில் பொதுவாய் எல்லா இடத்திலும் காணப்படும். நாம் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். இது சருமத்திற்கு நிறத்தினை மெருகூட்டுகிறது. சருமத்தில் மினுமினுப்பையும் தருகிறது. அதனை நீரில் குழைத்து மாஸ்க் போல் போட்டு குளிர்ந்த் நீரில் கழுவ வேண்டும்.
க்ரீன் டீ :
சீனாவில் பெண்கள் க்ரீன் டீ குடிப்பதை ஒரு சம்பிரதாயமாகவே கொண்டுள்ளனர். அது சருமத்தில் ஏற்படும் சின்ன சின்ன சுருக்கங்களையும் போக்குவதால் அதனை நாள்தோறும் குடிக்கின்றனர். அதனால்தான் வயதானாலும் அவர்களின் சருமம் இளமையாகவே இருக்கின்றது.
மசாஜ்:
சீனாப் பெண்கள் ஆயில் மசாஜ் செய்வதை வழக்கப்படுத்திக் கொண்டனர். அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. நரம்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்வு தருவதாக நம்புகிறார்கள்.
புதினா இலை :
புதினா இலையை பேஸ்ட் செய்து அதனை முகத்தில் மாஸ்க் போல போடுவதை சீன மக்கள் விரும்புகிறார்கள். காரணம் அவை சருமத்தில் இறந்த செல்களை அகற்றி, இளமையாக வைக்கிறது. நிறத்தினை அதிகரிக்கச் செய்கிரது. முகப்பரு, மரு போன்ற தொற்று நோய்களை அண்ட விடாமல் செய்கிறது.
மஞ்சள் :
மஞ்சள் நம்மைப் போலவே சீன மக்களும் விரும்புகிறார்கள். அதனை அதிகமாய் உணவிலும் சேர்த்துக் கொள்கிறார்கள். அழகிற்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் கெமிக்கல் கலந்த க்ரீம்களை வாங்க மாட்டார்கள். இயற்கையான அழகு தரும் பொருட்களையே நம்புகிறார்கள்.