26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
201608121100401901 how to make ginger curd pachadi SECVPF
சாலட் வகைகள்

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி

ஜீரணம் ஆகாமல் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி தயிர் பச்சடியை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

தயிர் – ஒரு கப்,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
சின்ன வெங்காயம் – 10,
கடுகு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

* வெங்காயத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

* பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

* இஞ்சியை தோல் சீவி சிறிய துண்டுகளாக்கவும்.

* இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை தயிருடன் கலக்கி உப்பு சேர்க்கவும்.

* கடாயில் சிறிதளவு எண்ணெயை காய வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிர் கலவையில் சேர்க்கவும்.

* சத்தான இஞ்சி தயிர் பச்சடி ரெடி.

* இதை சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். சாப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.201608121100401901 how to make ginger curd pachadi SECVPF

Related posts

அச்சாறு

nathan

சூப்பரான பொரி வெஜிடபிள் சாலட்

nathan

சுவையான சத்தான பீட்ரூட் சாலட்

nathan

சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்

nathan

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்

nathan

கிரீன் சாலட் வித் ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங் (ஃபிரான்ஸ்)

nathan

ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி….

nathan

கேரட் சாலட் செய்வது எப்படி

nathan

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

nathan