சர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான் வெந்தயம். வெந்தயமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது.
மேலும் வெந்தயம் நீரிழிவை கட்டுப்பாட்டுன் வைப்பதோடு, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அதே சமயம் வெந்தயம் உடலில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக விளக்கும் கொலஸ்ட்ராலுக்கும் நல்லது. வெந்தயம் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று கேட்கலாம். மேலும் ஒவ்வொருவரும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
ஏனெனில் எந்த ஒரு மருத்துவ பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன், அதனைப் பற்றி முற்றிலும் தெரிந்து கொண்டு எடுப்பதால், மனதில் நம்பிக்கை அதிகரிப்பதோடு, அந்த நம்பிக்கையினால் எடுத்துக் கொள்ளும் மருந்தின் முழு சக்தியையும் காணலாம்.
வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்
வெந்தயத்தில் வைட்டமின் ஏ, புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், தையாமின், ரிபோஃப்ளேவின், நிக்கோடினிக் அமிலம், சோடியம், சுண்ணாம்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
இரத்த சர்க்கரையின் அளவு
சாதாரணமாக நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 80-110 மி.லி வரை இருக்கும். மேலும் இது ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அடிப்படையில் வேறுபடும்.
இன்சுலின் வேலை
பொதுவாக நாம் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ளும், இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும். அப்படி அதிகமாகும் போது அதனை இன்சுலின் தான் கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளின் பிரச்சனை
நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். ஆனால் வெந்தயத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், இன்சுலின் சுரப்பு அதிகமாகி, இன்சுலின் வேலை சீராக நடக்கும்.
வெந்தயம் எடுக்கும் முறை
நீரிழிவு நோயாளிகள், வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரோடு வெந்தயத்தையும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
மருத்துவ ஆலோசனை அவசியம்
என்ன தான் இருந்தாலும், கை மருத்துவத்தை மேற்கொள்ளும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அவரின் பரிந்துரையின் பேரில் எடுப்பதே நல்லது.
கொலஸ்ட்ரால் குறையும்
முக்கியமாக வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.