28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
14 1436856029
மருத்துவ குறிப்பு

பிறவி குணாதிசயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வினோதமான செயல்பாடுகள்!!!

உலகில் உள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் தனிப்பட்ட ஒரு சில பிறவி குணாதிசயங்கள் இருக்கும். அவற்றை என்ன செய்தாலும் மாற்ற இயலாது. நாம் வளரும் போது நம்மோடு சேரும் குணாதிசயங்களை கூட மாற்றிவிடலாம். ஆனால், நமது பிறவியோடு வரும் குணாதிசயங்கள் மரபணுவோடு தொடர்பு உடையவைகள், அவற்றை மாற்றுவது அவ்வளவு எளித்தல்ல.

ஆனால், ஒரு சில விஷயங்கள் உங்களுக்கு நேரிடும் போது, அந்த பிறவி குணாதிசயங்களும் கூட மாறும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, மிகவம் தைரியசாலியான நபராக இருந்திருப்பார், ஆனால் திடீரென ஓர் விபத்து அல்லது விபத்தை நேரில் கண்ட பிறகு மொத்தமாய் ஆளே மாறியிருப்பார்.

இது போல ஆறு விஷயங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் போது, அவை உங்கள் பிறவி குணாதிசயங்களையே மாற்றிவிடும் என்று கூறிகிறார்கள்…

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

சில ஆய்வுகள் வியக்க வைக்கும் தகவல்களை தருகின்றன. பெரும்பாலான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு, தானம் பெற்றுக் கொண்ட நபர்களின் குணாதிசயங்களில் மாற்றங்கள் காணப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். தங்களது குணாதிசயங்களில் மாற்றங்கள் தெரிகின்றன என்று அந்த நபர்களே கூறுவது தான் வியப்பின் உச்சமாய் இருக்கிறது.

பெண்களின் அண்டவிடுப்பின் போது

பெண்களுக்கு, அவர்களது அண்டவிடுப்பின் (Ovulation) போது, உச்சமடையும் போது, அவர்களில் குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறதாம். அவர்களது உடல் மொழி, குரல் போன்றவற்றில் வியக்க வைக்கும் அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மூளை அறுவை சிகிச்சை

மனித உடலிலேயே மிகவும் சிக்கலான பகுதி எது என்றால், அது மூளை தான். நீங்கள் இன்னார் என்ற மொத்த விபரமும் அடங்கியுள்ள ஸ்டோரேஜ் பகுதியே அது தான். மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது பிறவி குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறதாம். மனநிலை, மனோபாவம், சிறு சிறு செயல்பாடுகளில் சிறிய அளவிலான மாற்றங்கள் தென்படுகிறதாம்.

வேலையில்லா பட்டதாரிகள்

திடீரென வேலையை இழந்தவர்கள், அல்லது, நீண்ட நாட்களாக வேலையே இல்லாமல் இருந்தவர்கள் போன்றவர்களுக்கு அவர்களது பிறவி குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறதாம். இதற்கு காரணம் அவர்களுக்குள் ஏற்படம் மன அழுத்தமும், மன உளைச்சலும் தான் என்று கூறப்படுகிறது.

தொற்றுகள் நோய்

தொற்றுகள் ஏற்பட்டு உடல்நலம் குன்றி போகும் சிலருக்கு, அதில் இருந்து மீண்டு வரும் போது, நிறைய குணாதிசய மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும். இதிலிருந்து அவர்கள் இயல்பு முறைக்கு திரும்ப சில கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றும் ஓர் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெரும்பாலும், மனநல மாற்றம், புலன் உணர்வு குறைவு மற்றும் குணாதிசயங்களில் மாற்றம் போன்றவை ஏற்படுகிறதாம்.

மாயத்தோற்ற காளான் (Psychedelic Mushrooms / Magic Mushrooms)

மாயதோற்ற மருந்து (Drug) எனப்படும் Psychedelic Mushrooms / Magic Mushrooms உட்கொள்பவர்களுக்கு, பிறவி குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுமாம். பொதுவாகவே, போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள நபர்களுக்கு அவர்களது பிறவி குணாதிசயங்களில் மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

14 1436856029

Related posts

கருவளம் மற்றும் ஆண் உயிரணுக்களை அதிகரிக்க உதவும் அதிசய மருத்துவ மரம் இதுதாங்க இத படிங்க!!

nathan

வாடகைத் தாய் மற்றும் சோதனைக் குழாய்கள் – குழந்தை பெற சிறந்த வழி எது?

nathan

மாதவிடாயின் போது பிறப்புறுப்பு அரிப்பு, ஈஸ்ட் தொற்று ஏற்படாமல் இருக்க

nathan

கண்டிப்பாக வாசியுங்க குழந்தை பருவத்திலேயே புற்றுநோய் அபாயத்தை எப்படி தடுப்பது?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

nathan

பிரசவத்திற்கு பிறகு அதிகரிக்கும் வயிற்று கொழுப்பைக் கரைப்பதற்கான சில எளிய வழிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

பேச்சுலர்களே! உங்கள் வீடுகளை அழகாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

nathan

நோய்களை குணப்படுத்த சிறந்த மூலிகை சொடக்கு தக்காளி

sangika

தெரிந்துகொள்வோமா? பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்? இதனால் என்ன நன்மை?

nathan