27 C
Chennai
Wednesday, Nov 13, 2024
30 1446206442 atta halwa
இனிப்பு வகைகள்

கோதுமை அல்வா

உங்களுக்கு அல்வா பிடிக்குமா? நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா? அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அந்த கோதுமை அல்வாவை செய்து சுவையுங்கள். இந்த அல்வா செய்வதற்கு 1/2 மணிநேரம் போதும்.

சரி, இப்போது அந்த கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1/4 கப் சர்க்கரை – 1/2 கப் தண்ணீர் – 1/2 கப் + 1/4 கப் நெய் – 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை பாதாம் – 4 (நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா ரெடி!!!

30 1446206442 atta halwa

Related posts

எக்லஸ் கேரட் புட்டிங்

nathan

உலர் பழ அல்வா

nathan

ஜிலேபி

nathan

சோள மாவு அல்வா: தீபாவளி ஸ்பெஷல்

nathan

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan

தீபாவளி ஸ்பெஷல் லட்டு

nathan

கருப்பட்டி புட்டிங் செய்வது எப்படி தெரியுமா?

nathan

ரவா கேசரி எப்படி செய்வது?

nathan

மிக்க சுவையான எள்ளு உருண்டை

sangika