24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl3786
சிற்றுண்டி வகைகள்

வெல்ல தேங்காய்ப்பால்

என்னென்ன தேவை?

தேங்காய் நடுத்தர அளவு1,
வெல்லம் (விகிதம் செய்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது),
தண்ணீர்3 கப்,
ஏலக்காய் 3,
குங்குமப்பூ ஒரு சிட்டிகை,
கேசரி பவுடர் ஒரு சிட்டிகை (விரும்பினால்),
பச்சைக்கற்பூரம் ஒரு சிட்டிகை (விரும்பினால்),
முந்திரி 6,
உலர் திராட்சை 6,
நெய் 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துத் தனியே வைக்கவும். தேங்காயைத் துருவி, 1 1/2 கப் சூடான தண்ணீரில் ஊற வைக்கவும். மிக்ஸியில் அரைத்து, சுத்தமான துணியில் அல்லது மெல்லிய வடிகட்டியில், கையால் அழுத்திப் பிழிந்து பாலெடுத்துத் தனியே வைக்கவும். இது முதல் தேங்காய்ப் பால். மீண்டும் சிறிது நீர் சேர்த்து, அரைத்து, 2வது பாலெடுத்துத் தனியே வைக்கவும்.

தேங்காய்ப்பால்: வெல்லம் விகிதம் = 3:1 வெல்லத்தைப் பொடித்து, ஒரு கரண்டி தண்ணீரில் கரைய விட்டு, வடிகட்டி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும். இப்போது 2வது தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். ஒரு நிமிடம் கொதித்ததும், முதல் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கி, நுரைத்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். ஏலக்காய், குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்க்கவும். பரிமாறும் முன் வறுத்த முந்திரி, திராட்சையைப் போடவும்.

குறிப்பு: தேங்காய்ப்பால் கொதித்தால் திரிந்து விடும். நுரைத்தவுடன் இறக்கவும். அதே சமயம், சரியாக சூடாகாவிட்டால் பச்சை வாசனை வரும். அதனால் கொதிக்கும்போது கவனமாக இருக்கவும்.sl3786

Related posts

தோசை

nathan

ரோஸ் லட்டு

nathan

குபூஸ்(அரேபியன் ரொட்டி)

nathan

புத்தாண்டு புது விருந்து: பச்சைப் பயறு வடை

nathan

முட்டை சென்னா

nathan

யுகாதி ஸ்பெஷல் பச்சடி செய்வது எப்படி

nathan

மரவள்ளிக்கிழங்கு வடை

nathan

சுகர்ஃப்ரீ ஓட்ஸ்  – பேரீச்சம் பழ லட்டு

nathan

எலுமிச்சை இடியாப்பம்

nathan