24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
4 25 1464168073
தலைமுடி சிகிச்சை

இளநரையை கருமையாக மாற்றும் இயற்கை மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இளநரை என்பது இப்போது சாதரணமாகிவிட்டது. ஊட்டச் சத்து குறைபாடு, சுற்றுப் புற சூழ் நிலை, கெமிக்கல் கலந்த ஷாம்பு உபயோகிப்பது, கலரிங் ஆகியவைகள் இள நரையை ஏற்படுத்துகின்றன.

ஏன் கலரிங் செய்யக் கூடாது : டீன் ஏஜில் இருக்கும் பெண்கள் இள நரை வந்தவுடன் அதை இயற்கையாக போக வழிகளை தேடுவதை விட்டுவிட்டு, கலரிங் செய்ய ஆரம்பிக்கின்றனர். இந்த கெமிக்கல் கலந்த டைகள் சரும செல்களில் மாற்றத்தை உண்டு பண்ணி, இள நரையை நிரந்தரமாக்கிவிடும். இள நரை வந்தால், போதிய அளவு சத்துள்ள ஆகாரங்கள் சாப்பிட்டாலே, போய் விடும். கெமிக்கல் கலந்த டை வேண்டாம் .

எதனால் வெள்ளை முடி வருகிறது? ஸ்கால்ப்பின் அடியிலுள்ள செல்களில் மெலனின் சுரப்பு குறையும்போது அங்கே வெள்ளை முடி வருகிறது. இதற்கு காரணங்கள் நிறைய உள்ளன. வேலை அழுத்தம், மன அழுத்தம், மரபு காரணமாக, ஊட்டச் சத்து குறைபாடு என பல காரணங்கள் உள்ளன.

சரியான காரணத்தை கண்டுபிடித்து தீர்வு காண வேண்டும். இளநரையை குறைத்து கருமையான முடிகள் வளர இயற்கை நிறைய வழிகளை நமக்கு கொடுத்திருக்கிறது. அவற்றை காண்போம்.

வெங்காயம் : நம் ஸ்கால்பில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் என்ற ஃப்ரீ ரேடிகல்ஸ், சரும செல்களில் அதிகமாகி முடியின் நிறத்தினை மாற்றும். இதனால் வெள்ளை முடி ஏற்படும்.

லண்டனிலுள்ள ப்ராட்ஃபோர்ட் பல்கலைக் கழகம் செய்த ஆய்வில் வெங்காயத்தில் கேட்டலேஸ் என்ற என்சைம் உள்ளது என தெரிய வந்துள்ளது. இது தலை முடியில் தங்கி விளைவுகளை ஏற்படுத்தும், ஹைட்ரஜன் பெராக்ஸைடை வெளியேற்றுகிறது.

பச்சை வெங்காயத்தை அரைத்து ஸ்கால்ப்பில் தடவவும். அரை மணி நேரம் கழித்து அலாசவும். இவ்வாறு செய்தால், நாளடைவில் நரைமுடி மறைந்து, போஷாக்குடன் ஆரோக்கியமான கூந்தலை பெறுவீர்கள்.4 25 1464168073

அவகேடோ ப்ரொட்டின் நிறைந்தது. கூந்தலுக்கு ஈரப்பதம் தந்து, ஊட்டம் அளிக்கும். இளநரையை தடுக்கும். இதில் இளநரையை தடுக்கக் கூடிய ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் உள்ளது.

அவகேடோவின் சதை பகுதியை எடுத்து, பேஸ்ட் போலச் செய்து, தலையில் மாஸ்க் போல போட்டுக் கொள்ளுங்கள். 2 மணி நேரம் கழித்து தலை முடியை அலசலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் இள நரை சீக்கிரம் மறைந்துவிடும்.
5 25 1464168080
ஹென்னா :

ஹென்னா எல்லாரும் அறிந்ததே. ஹென்னாவை எப்படி உபயோகப்படுத்துவதென தெரியாமல் உபயோகித்தால், அது ஸ்கால்ப்பில் பிரச்சனைகளை உண்டாக்கும். ஹென்னாவை நேரடியாக அப்படியே உபயோகித்தால் பொடுகு, முடி உதிர்தல், வறட்சி ஆகியவைகள் உண்டாகும்.

ஹென்னாவுடன், பால் அல்லது, முட்டையின் வெள்ளைக் கரு கலந்து உபயோகிக்க வேண்டும். பீட்ரூட் சாறு, முட்டையின் வெள்ளைக் கரு, ஆகியவற்றை ஹென்னாவுடன் கலந்து, குறைந்தது நான்கு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

அதன் பின்னர் தலைக்கு உபயோகப்படுத்த வெண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடன் வளரும். இளநரை மறைந்து விடும்.
6 25 1464168085

வால் நட் இலை :

வால்நட் இலை ஒரு இயற்கை டை ஆகும். இதில் கெமிக்கல் இல்லை. வால் நட் இலையில் உருவாகும் ஜங்க்லோனா என்ற பொருள் நரை முடியை கருமையாக மாற்றும்.

வால் நட் இலைகளை அரைத்து, அதனை தலையில் போடலாம். அல்லது இலைகளை ஒரு கப் நீரில் போட்டு 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த நீர் ஆறிய பின், தலை முடியில் தடவி,15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த் நீரில் அலசலாம். இது நரை முடியை கருமையாக்கும்.
7 25 1464168092
மேலே கூறிய அனைத்து குறிப்புகளும் எந்த வித பிரச்சனைகளையும் கூந்தலுக்கோ, சருமத்திற்கோ உண்டு பண்ணாது. இதனை உபயோகித்து பயன் பெறுங்கள்.

Related posts

பொடுகு தொல்லையை நீக்கி கூந்தல் வளர்ச்சியை தூண்டும் கடுகு எண்ணெய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஹேர்டையே பயன்படுத்தாமல் ஒரே வாரத்தில் நரை முடியை கருமையாக்க வேண்டுமா?

nathan

முடி உதிர்வது குறைந்து முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் நல்ல பளபளப்பாகவும் மாற இதை செய்யுங்க!…

nathan

முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்!

nathan

முடி வளர…. பாட்டி மருத்துவம் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்தை பொலிவாக்க பேஷியல் செய்ய குளிர்காலம் மிகவும் ஏற்றது

nathan

பொடுகை போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர் – எளிய நிவாரணம்

nathan

கூந்தல் உதிர்வா? அடர்த்தி இல்லையா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

nathan

தலைமுடி மென்மையாகவும் வளவளன்னு கருகருன்னு இருக்க நீங்க இந்த விஷயங்கள செஞ்சா போதுமாம்!

nathan