25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201608090853215240 Cumin seeds millet Dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

தினை சீரக தோசை

தினை அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினை அரிசியில் எப்படி தோசை செய்வது என்று பார்க்கலாம்.

தினை சீரக தோசை
தேவையான பொருட்கள் :

தினை – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
தயிர் – ஒரு கப்
தண்ணீர் – 2 கப்
மிளகு தூள் – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 2

தாளிக்க :

கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய் வற்றல் – 2

செய்முறை :

* இஞ்சி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* ஒரு அகண்ட பாத்திரத்தில் பொடி பண்ணிய தினை ரவா, அரிசி மாவு, தயிர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும். வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

* கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன், மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும்.

* கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

* தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணெண் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

* இதற்கு தொட்டு கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.201608090853215240 Cumin seeds millet Dosa SECVPF

Related posts

சுவையான வெங்காய பொடி தோசை

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

மொறுமொறுப்பான… பிரட் பஜ்ஜி

nathan

அரைத்தமாவு தட்டை

nathan

குழந்தைகளுக்கான கார்ன் – சீஸ் ஊத்தப்பம்

nathan

சூப்பரான மக்ரோனி ரெசிபி

nathan

சத்தான முளைகட்டிய நவதானிய சுண்டல்

nathan

சூப்பரான சிக்கன் – முட்டை பொடிமாஸ்

nathan