201608100723420287 how to make fish roast SECVPF
அசைவ வகைகள்

சுவையான மீன் ரோஸ்ட் செய்வது எப்படி

மீன் குழம்பு, வறுவல் என்று சாப்பிட்டவர்கள் வித்தியாசமாக ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான மீன் ரோஸ்ட் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மீன் – 2 பெரிய துண்டுகள் ( 200 கிராம் )
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

சோம்பு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டீஸ்பூன்

செய்முறை :

* மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும்.

* தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து நன்றாக பிரட்டவும்.

* இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்த பின் அதில் மீனை போட்டு வேக விடவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும்.

* இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார்.

குறிப்பு :

* மீன் ரோஸ்ட் ரெடி ஆனவுடன் சிறிது பூண்டை நசுக்கி போட்டு இறக்கினால் இன்னும் சுவை கூடும்.

* அடிக்கடி மேலே சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றினால் நன்கு முறுகலாக வரும்.

* இதனை எல்லா வகையான சாதத்திற்கும் பரிமாறலாம்.201608100723420287 how to make fish roast SECVPF

Related posts

சால மீன் குழம்பு செய்வது எப்படி?

nathan

சுவையான கொத்து கோழி

nathan

சுவையான சிக்கன் லெக் ஃப்ரை செய்ய தெரியுமா…!

nathan

எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது.

nathan

கிரீன் சிக்கன் குழம்பு

nathan

ஆட்டுக்கால் பாயா

nathan

முட்டை சாட்

nathan

அவசர பிரியாணி

nathan

பாத்தோடு கறி

nathan