32.8 C
Chennai
Thursday, Jul 3, 2025
16 1437027524 7 cholestrol
மருத்துவ குறிப்பு

உடலில் கொழுப்பின் உண்மையான வேலை என்னவென்று தெரியுமா?

நிறைய மக்கள் கொலஸ்ட்ராலை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். ஆனால் கொலஸ்ட்ரால் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது என்பது தெரியுமா? கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL). மேலும் கொலஸ்ட்ரால் உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். அது இல்லாவிட்டால், உடலியக்கம் சீராக இருக்காது.

அதில் நல்ல கொலஸ்ட்ரால் இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகளின் சுவர்களில் படிந்து, பல்வேறு இதய நோய்க்கு வழிவகுக்கும். உடலுக்கு வேண்டிய கொலஸ்ட்ரால் இரு வழிகளில் நமக்கு கிடைக்கிறது. அதில் உடல் தானாக உற்பத்தி செய்து கொள்ளும் மற்றும் உணவுப் பொருட்களில் இருந்து பெற்றுக் கொள்ளும்.

சரி, கொலஸ்ட்ராலின் பணி தான் என்ன? என்று கேட்கிறீர்களா? அதை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஹார்மோன் உற்பத்தி கொலஸ்ட்ரால் உடலில் ஹார்மோன் உற்பத்திக்கு பெரிதும் உதவி புரிகிறது. அதிலும் ஈஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டிரோன், புரோஜெஸ்டிரோன், அல்டோஸ்டெரோன் மற்றும் கார்டிசோன் போன்ற முக்கியமான ஹார்மோன்களை கொலஸ்ட்ரால் தான் உற்பத்தி செய்கிறது.

வைட்டமின் டி உற்பத்தி எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு காரணமான வைட்டமின் டியை சூரியக் கதிர்கதிர்களிடமிருந்து உடல் உறிஞ்சுவதற்கு கொலஸ்ட்ரால் தான் பெரிதும் உதவியாக உள்ளது.

செரிமானம் கல்லீரலில் சுரக்கப்படும் செரிமான திரவமான பித்த நீரை உருவாக்குவதற்கு கொலஸ்ட்ரால் பயன்படுத்தப்படுகிறது. இதனால் செரிமானம் தங்கு தடையின்றி ஆரோக்கியமாக நடைபெறும்.

உயிரணு மென்படலத்திற்கு ஆதரவு கொலஸ்ட்ரால் உயிரணுக்களின் ஓர் கட்டமைப்பு கூறுகளாகும். கொலஸ்ட்ரால் தான் செல்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குகிறது. எப்போது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ, செல்கள்/உயிரணுக்கள் பாதிக்கப்படும். இந்த மாற்றத்தினால் உடலுக்கு வேண்டிய ஆற்றல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதனால் உடலின் சீரான செயல்பாடுகளான செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

நோயெதிர்ப்பு மண்டலம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு கொலஸ்ட்ரால் மிகவும் அத்தியாவசியமானது. நம் நோயெதிர்ப்பு செல்களானது தொற்றுகளை எதிர்த்துப் போராவும் மற்றும் போராட்டத்திற்குப் பின் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளவும் கொலஸ்ட்ராலை சார்ந்துள்ளது. அதுமட்டுமின்றி கெட்ட கொலஸ்ட்ராலானது நேரடியாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன இணைந்து, அதனை செயலிழக்கச் செய்து, உடலுறுப்புக்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பவர்கள் தான் நோய்த்தொற்றுகளுக்கு அடிக்கடி உள்ளாவார்கள். உடலினுள் ஏதேனும் புதுப்பிக்க வேண்டிய வேலைகள் இருந்தால், உடலானது கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்து, அதனை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி சரிசெய்யும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொலஸ்ட்ரால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றும் செயலாற்றி, ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும்.

குறிப்பு எனவே கொலஸ்ட்ராலை தவறாக எண்ண வேண்டாம். உடலுக்கு கொலஸ்ட்ராலும் மிகவும் அவசியம். எனவே கொலஸ்ட்ரால் உள்ள உணவை முற்றிலும் குறைத்துவிடாமல், எந்த ஒரு உணவையும் அளவாக சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்து வாருங்கள்.

16 1437027524 7 cholestrol

Related posts

புரோஸ்திரேட் வீக்கம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்

nathan

மூலிகை பொடிகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்..!!

nathan

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிஞ்சிக்கங்க…

nathan

வேரிகோஸ் பிரச்சினையா? இதோ அதை தீர்ப்பதற்கான வழிமுறை..!!

nathan

பெண்களே சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க…

nathan

இப்படி இருந்தால் ஆபத்து? பச்சை உருளைக்கிழங்கு நஞ்சா?

nathan

உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கான அர்த்தங்கள் என்ன? உங்களுக்கு தெரியுமா?

sangika

வெயில் காலத்தில் குழந்தைகளில் பாதுகாப்பு

nathan

உங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளதா? மேலும் இந்த பானங்களை அடிக்கடி குடியுங்கள்…

nathan