28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl3695
​பொதுவானவை

காலா சன்னா மசாலா

என்னென்ன தேவை?

கருப்பு கொண்டைக்கடலை – 250 கிராம்,
வெங்காயம் – 4,
உருளைக்கிழங்கு பெரியது – 1,
தக்காளி – 4,
இஞ்சி பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
சுக்கு தூள் – 1/4 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய்,
உப்பு, எண்ணெய், மல்லித்தழை – தேவைக்கு,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
சீரகம் – சிறிது,
கரம் மசாலா – ஒரு சிட்டிகை,
காய்ந்த மாங்காய் தூள் – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

கருப்பு கொண்டைக்கடலை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு 20 நிமிடம் அல்லது 6 விசில் வரை வேக வைக்கவும். வெங்காயம், பூண்டு, இஞ்சியை அரைத்துக் கொள்ளவும். தக்காளியை தனியாக அரைக்கவும். ஒரு கடாயில் நெய் விட்டு சூடாக்கி, சீரகம் அரைத்த வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும். பின் தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இத்துடன் உப்பு மற்ற தூள்கள் சேர்த்து வதக்கி நெய் (எண்ணெய்) பிரிந்து வரும் போது மீண்டும் வேக வைத்த மூக்கடலையை சேர்த்து மேலும் குக்கரில் 1 முதல் 2 விசில் வந்ததும் இறக்கி இரண்டாவது முறை கொண்டைக்கடலையை வேக வைக்கும் போது கரம் மசாலா சேர்த்து வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வேக விட்டு இறக்கி அதன் மேல் மல்லித்தழை தூவி பரிமாறவும். பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி போட்டு அலங்கரிக்கவும்.sl3695

Related posts

வெங்காய ரசம்

nathan

இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்…!

nathan

சத்து நிறைந்த பச்சை பயறு சுண்டல்

nathan

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

nathan

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்

nathan

சத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்

nathan

மாம்பழ பிரஞ்சு டோஸ்ட் சான்விச்

nathan

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

nathan

ஆக்கப்பூர்வமானதாக மாற்றுங்கள்

nathan