நீங்கள் உங்கள் மேக் கப் போட தொடங்கும் முன் உங்கள் சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்தி கொள்ளுங்கள். நடுத்தர தன்மை கொண்ட ஃபவுண்டேஷனை உங்கள் முகத்திற்கு பயன்படுத்துங்கள்.
உங்கள் முகத்திலுள்ள மாசு மருக்களை நீங்கள் மறைக்க விரும்பினால், ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முன் கன்சீலர் கொண்டு மறையுங்கள். கன்சீலரை மாசு மருக்களை மறைக்க மட்டும் பயன்படுத்துங்கள். அது முகம் முழுவதும் பரவி விட கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
நடுத்தரமாக பரவும் தன்மை கொண்ட கிரீம்கள் மற்றும் முழுவதும் பரவும் தன்மை கொண்ட ஃபவுண்டேஷன் கிரீம்கள், சுத்தமான கிரீம்களையும், பிபி கிரீம்களையும் விட நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டவை. எண்ணெய் மண்டலத்திலிருந்து நாள் முழுவதும் பாதுகாக்க பவுடரே சிறந்த தேர்வாகும். தளர்வான ட்ரான்சுலான்ட் பவுடரை தேர்வு செய்வதை விட பவுண்டேஷனை தங்க வைக்க அழுத்தமான பவுடரை தேர்வு செய்யலாம்.
உங்கள் கன்னங்களில் க்ரீம்களை தடவி விட்டு, பின் அதே நிற ஷேடில் பவுடரை பயன்படுத்தலாம். மழைகாலங்களில் உங்கள் கண்களுக்கு நீர் புகாத ஐ லைனர்களையும், மஸ்காராவையும் பயன்படுத்துங்கள். கண்ணிற்கான மேக்கப்பை பொறுத்த வரை மங்கலாகும் தன்மையற்ற ஐ ஷேடோ க்ரீம்களை பயன்படுத்துங்கள்.
நமது உதடு அடிக்கடி உலர்ந்து விடுவதும், லிப்ஸ்டிக்கின் நிறம் மங்கி விடுவதும் வழக்கமான ஒன்று. இதனை தடுக்க முதலில் லிப் லைனரை பயன்படுத்தி விட்டு, பின்னர் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். நாம் தேர்ந்தெடுத்துள்ள லிப்ஸ்டிக் ஈரப்பதம் நிறைந்துள்ளதாக இருப்பது சிறந்தது.
உங்கள் சருமத்தை உலர்வானதாகவும், எண்ணெய் பசையற்றதாகவும் வைத்திட உங்கள் கைப்பையில் எப்போதும் சில டிஸ்யூ தாள்களையும், பவுடர் பப்பையும் வைத்திருங்கள். இவற்றைக் கொண்டு உங்கள் முகத்தில் ஒற்றி எடுங்கள்.