30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201608010936172724 Preventing beetroot formation kidney stones SECVPF
மருத்துவ குறிப்பு

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட்

பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்ந்து கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கலாம்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட்
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகிறார்கள். பீட்ரூட்டில் உள்ள கார்போ ஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போ ஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது.

கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லி கிராமும், இரும்பு 10 மில்லி கிராமும், வைட்டமின் சி 10 மில்லி கிராமும், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின், வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், க்ளோரின், அயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், ரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்தும், பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாரை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்ந்து கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கலாம்.

புற்றுநோயால் துன்பப்பட்டு கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கலாம். ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட்டின் நன்மைகள் பற்றி சிலவற்றை காண்போம்:-

* பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல், அரிப்பு மாறும்.

* தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் குணமாகும்.

* பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

* பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை கூட்டும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.201608010936172724 Preventing beetroot formation kidney stones SECVPF

Related posts

தைராய்டு பாதிப்பை அஜாக்கிரதையாய் எடுத்துக்காதீங்க! அதன் அறிகுறிகளும் , தீர்வும் !!

nathan

உங்களுக்கு தெரியுமா அரிசி உணவு சமைக்கும் போது இதைச் செய்தால் போதும் கார்போஹைட்ரேட் அளவைக் குறைக்கலாம்!

nathan

குறும்பு செய்யும் பள்ளித்தோழர்களை சமாளிப்பது எப்படி?

nathan

பாலூட்டும் தாய்மார் தடுப்பூசி போட்டால் பாதிப்பா?

nathan

அவசியம் படிக்க..கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்… இது உண்மையா? பொய்யா?

nathan

தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்

nathan

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மூட்டு வலி அதிகமாகுதா? திராட்சை ஜூஸ் குடிங்க!

nathan

பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை -தெரிந்துகொள்வோமா?

nathan