கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 1 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 கப் (துருவியது)
நெய் – 2 மேசைக்கரண்டி
முந்திரி – 1 தேக்கரண்டி
கருப்பு எள் – தேக்கரண்டி
திராட்சை – 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
சுக்கு தூள் – 1 சிட்டிகை
செய்முறை :
* வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது)
* எள்ளை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்.
* நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
* கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
* சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த லட்டு தயார்.